சனி, 2 பிப்ரவரி, 2013

சூர்யா நடித்த 'சிங்கம்-2' படம் மீது தணிக்கைகுழுவில் புகார்


சூர்யா, அனுஷ்கா, ஹன்சிகா நடித்துள்ள சிங்கம் 2 படம் ரிலீசுக்கு தயாராகிறது. ஹரி இப்படத்தை இயக்கியுள்ளார். இதில் முஸ்லிம்களுக்கு எதிரான காட்சிகள் இருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இது குறித்து அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வன்னிஅரசு சென்னை தணிக்கை குழு அதிகாரிக்கு அளித்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:- சூர்யா நடித்து ஹரி இயக்கத்தில் வெளிவர இருக்கும் சிங்கம் 2 படத்தில் வில்லன்கள் கடற்கொள்ளையர்களாக சித்தரிக்கப்பட்டு உள்ளனர். இப்படத்தில் இஸ்லாமியர்களுக்கு எதிரான காட்சிகள் உள்ளன. இம்மாதிரியான காட்சிகளை முன் கூட்டி சுட்டிக் காட்டுவது சமூக பொறுப்புள்ளவர்களின் கடமை என்பதால் தணிக்கை குழு கவனத்துக்கு கொண்டு வருகிறோம். இந்த படத்தில் இத்தகு காட்சிகள் இடம் பெறாமல் தணிக்கை செய்து அனுமதி வழங்க வேண்டும். விஸ்வரூபம் படம் திரையிடப்படாமல் நிறுத்தப்பட்டதற்கு இஸ்லாமிய அமைப்புகள் மட்டும்மின்றி தணிக்கை குழுவும் காரணமாகும். சமூக பொறுப்பை தணிக்கை குழுவினர் சரியாக செய்யாததால் தான் தமிழகத்தில் அசாதாரண சூழல்கள் நிலவுகிறது. இதனை ஓரு படிப்பினையாக கொண்டு இனிவரும் திரைப்படங்களை கவனமாக தணிக்கை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

முத்தரப்பு பேச்சுவார்த்தை: ஜவாஹிருல்லாஹ் பேட்டி!


சென்னை:விஸ்வரூபம் பட விவகாரம் தொடர்பாக முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று 24 இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் மனித நேய மக்கள் கட்சியின் மூத்த தலைவரும், எம்.எல்.ஏவுமான ஜவாஹிருல்லா கேட்டுக் கொண்டுள்ளார். விஸ்வரூபம் படம், சட்டம் – ஒழுங்குப் பிரச்னையின் காரணமாகவே தடை செய்யப்பட்டது. இதில் அரசியல் தலையீடு எதுவும் இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா செய்தியாளர்களிடம் வியாழக்கிழமை கூறினார். இஸ்லாமிய அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி இணக்கமான உடன்பாடு ஏற்பட்டால் படத்தை வெளியிட அரசு உறுதுணையாக இருக்கும் என்றும் ஜெயலலிதா அறிவித்துள்ளார். இந்நிலையில் சென்னையில் வியாழக்கிழமை 24 இஸ்லாமிய அமைப்பின் நிர்வாகிகள் ஆலோசனையில் ஈடுபட்டனர். அதன்பின் ஜவாஹிருல்லா செய்தியாளர்களிடம் கூறியது: விஸ்வரூபம் படம் பிரச்னையைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்று கூறிய முதல்வர் ஜெயலலிதாவுக்கு கூறியதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்தப் பேச்சுவார்த்தை முத்தரப்பு பேச்சுவார்த்தையாக அமைய வேண்டும். அரசு ஒரு தரப்பாகும், இஸ்லாமிய சமுதாயத்தைச் சேர்ந்தோர் ஒரு தரப்பாகவும், கமல் ஒரு தரப்பாகவும் இருந்து பேச வேண்டும். இதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். விஸ்வரூபம் பிரச்னையை அரசியல் ஆக்க வேண்டாம் என்று ஜெயலலிதா கூறியுள்ளதை நாங்கள் வரவேற்கிறோம். கமல்ஹாசன் இதுவரை எங்களுடன் பேச எந்த வகையிலும் தொடர்பு கொள்ளவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.எம்.ஹாரூண் கமல்ஹாசனைஸ் சந்தித்துப் பேசியதற்கும், 24 முஸ்லிம் அமைப்புகளுக்கும் எந்தஸ் சம்பந்தமும் இல்லை. இந்தப் பிரச்னையை எப்படி அணுகலாம் என்பது பற்றி நாங்கள் பேசி வருகிறோம். தியேட்டர்களில் நடந்த வன்முறையில் எங்களுக்கு தொடர்பு இல்லை. பேச்சுவார்த்தை சுமுகமான முறையில் நடைபெறும் என்று நம்புகிறோம் என்றார் அவர்.

ஹிந்தி 'விசுவரூபம்' : தமிழக ஊடகங்களின் 'பொய்ப்பிரச்சாரம்' அம்பலம்!


கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்ற பழமொழிக்கேற்ப, விசுவரூபம் ஹிந்தியில் வெளியான சில மணிநேரத்துக்குள்ளாகவே ஏற்பட்ட எதிர்ப்பைத்தொடர்ந்து, மும்பையில் முஸ்லிம் தலைவர்களை சந்தித்த கமலஹாசன் பல காட்சி நீக்கங்களுக்கு ஒப்புக்கொண்டார்.