புதன், 31 அக்டோபர், 2012

பிலிப்பைன்சில் நிலநடுக்கம்


மணிலா :பிலிப்பைன்ஸ் நாட்டில், ஏற்பட்ட நிலநடுக்கத்தால், தலைநகர் மணிலாவில், கட்டடங்கள் குலுங்கின. பிலிப்பைன்சில், தலைநகர் மணிலாவிலிருந்து, 50 கி.மீ.,தொலைவில் உள்ள, புலாகன் மாகாணத்தில், நேற்று, 3.8 ரிக்டர் அளவுக்கு, நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், மணிலா உள்ளிட்ட பகுதிகளில் கட்டடங்கள் குலுங்கின. இதன் காரணமாக, மக்கள் பீதியடைந்தனர். எனினும், இந்த நிலஅதிர்வுக்கு பிறகு, நிலநடுக்கம் ஏதும் ஏற்படவில்லை. பெரிய அளவு சேதங்களும் காணப்படவில்லை.

லாகூர் ரவுண்டானாவுக்கு பகத் சிங் பெயர் வைப்பது நிறுத்தி வைப்பு


லாகூர் : பாகிஸ்தானின், லாகூரில் உள்ள, ரவுண்டானாவுக்கு, சுதந்திர போராட்ட வீரர், பகத் சிங் பெயர் வைப்பது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்திய-பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு, பாகிஸ்தானில், வழக்கத்தில் இருந்த, இந்து பெயர்கள், மாற்றம் செய்யப்பட்டு விட்டன. இதற்கிடையே, லாகூரில், ஷத்மான் சவுக்கில் உள்ள ரவுண்டானாவுக்கு பகத் சிங் பெயர் சூட்டப்படுவதற்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். பாகிஸ்தானை சேர்ந்த, சுதந்திர போராட்ட வீரர் சவுத்ரி ரெஹ்மான் அலி பெயரை சூட்ட வேண்டும், என, சிலர் கோரியிருந்தனர். இந்திய சுதந்திர போராட்ட வீரர் பகத் சிங், பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றதற்காக, லாகூர் சிறையில், அடைக்கப்பட்டிருந்தார். 1931ம் ஆண்டு, மார்ச் மாதம், இவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. பிரிட்டிஷ் அரசை எதிர்த்து போரிட்டு, உயிர் நீத்த பகத் சிங் பெயரை சூட்ட வேண்டும், என, லாகூர் நகர நிர்வாகம் உத்தரவிட்டிருந்தது. பகத் சிங் பெயரை சூட்டுவதற்கு, எதிர்ப்பு தெரிவித்த மனுக்கள், நிராகரிக்கப்பட்டன. ஆனால், மும்பை தாக்குதலில் சம்பந்தப்பட்ட, பயங்கரவாத அமைப்பான "ஜமாத்-உத் தாவா' உள்ளிட்டவை, பகத் சிங் பெயர் வைப்பதற்கு, தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தன. "சீக்கியரின் பெயரை, சூட்டினால், கடுமையான பின்விளைவுகளை சந்திக்க வேண்டி வரும்' என, மிரட்டல் வந்ததால், பகத் சிங் பெயர் எழுதப்பட்ட பலகைகளை வைப்பதை, நகராட்சி ஊழியர்கள் நிறுத்தி வைத்திருந்தனர். இதற்கிடையே, பகத் சிங் பெயர் சூட்டுவதற்கான நடவடிக்கை ரத்து செய்யப்பட்டதாக, நகர நிர்வாகம் அறிவித்துள்ளது.

மருத்துவ செலவுக்காக ஒரே மகனை விற்ற பாகிஸ்தான் பெண் கைது


லாகூர் :பாகிஸ்தானை சேர்ந்த பெண், மருத்துவ செலவுக்காக, தனது ஒரே மகனை விற்று விட்டார். பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள குஜ்ரன்வாலா மாவட்டத்தை சேர்ந்தவர் கலீதா பீவி. இவர் இதயம் மற்றும் கல்லீரல் நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். இதற்கான மருத்துவ செலவுக்கு பணம் இல்லாத காரணத்தால், தனது ஒரே மகனான, ஏழுமாதமான பைசனை விற்றுவிட்டார். ஐக்கிய அரபு எமிரேட்டை சேர்ந்த, முகமது சவுகத் என்பவர் இந்த குழந்தையை 1.2 லட்ச ரூபாய்க்கு வாங்கியுள்ளார். இந்த செய்தி பத்திரிகைகளில் வெளியானதை தொடர்ந்து, கலீதாவும், சவுகத்தும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதிபர் தேர்தல் செலவு 2.6 பில்லியன் டாலர்


வாஷிங்டன் : வரலாற்றில் முதல்முறையாக அமெரிக்க அதிபர் தேர்தல் பணிக்காக மட்டும் 2.6 பில்லியன் டாலர் பணம் செலவிடப்பட்டுள்ளது. 2012ல் தேர்தலுக்காக அதிகபட்சமாக 6 பில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது. இதற்கு முன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் நடத்தப்பட்ட தேர்தலுக்காக செலவிடப்பட்ட 700 மில்லியன் டாலர்களே அதிகபட்ச தொகையாக இருந்து வந்தது. இந்த அதிகபட்ச தொகை வரலாற்று சாதனை மட்டுமல்ல, தேர்தலுக்கு தேர்தல் அதற்காக செலவிடப்படும் தொகையின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு சில வாரங்களே உள்ள நிலையில் தேர்தலுக்காக செலவிடப்பட்ட தொகை செப்டம்பர் இறுதி வாரத்தில் 19 மில்லியன் டாலர்களாகவும், அக்டோபர் முதல் வாரத்தில் 33 மில்லியன் டாலர்களாகவும், அக்டோபர் 21ல் இத்தொகை 70 மில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இந்த தேர்தலுக்காக நிறுவனங்கள் மற்றும் தனிமனித அமைப்புக்கள், செனட் சபை உறுப்பினர்கள் ஆகியோர் அளித்து வரும் தொகையும் அதிகரித்து வருகிறது.

திருமண வீட்டில் தீ : சவுதியில் 25 பேர் பலி


ஜெட்டா : சவுதி அரேபியாவில், திருமண வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, 25 பேர் பலியாயினர். 30 பேர் படுகாயமடைந்தனர். சவுதி அரேபியாவின், கிழக்கு பகுதியில் உள்ளது அய்ன் பதர் கிராமம். இங்குள்ள ஒரு வீட்டில், திருமணத்துக்காக அலங்கார பந்தல் அமைக்கப்பட்டிருந்தது. உயர் அழுத்த மின்சார ஒயர் அறுந்து, பந்தல் மீது விழுந்ததில், தீ விபத்து ஏற்பட்டது. இதனால், திருமணத்துக்கு வந்த, 25 பேர் பலியாயினர். 30 பேர் படுகாயமடைந்தனர். மின்சாரம் தாக்கி பலர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இறந்தவர்களில் பெரும்பாலோர் பெண்கள். இந்த சம்பவம் குறித்து, கிழக்கு மாகாண அரசு, விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

செவ்வாய், 30 அக்டோபர், 2012

நீலம் புயல் எச்சரிக்கை


வங்க கடலில் உருவாகியுள்ள நீலம் என்று பெயரிடப்பட்டுள்ள புயல் புதன்று மாலை கரையை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வேதாரண்யம் தொடங்கி திருவள்ளூர் வரை கடலோர மாவட்டங்களில் திங்கள் இரவிலிருந்து கன மழை பெயந்து வருகிறது. கிணறு, ஆறு, ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி வருகின்றன. திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் உள்ள வயல்கள் நீரில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யா: மர்ம நபர்கள் சுட்டு பள்ளிவாசல் இமாம் உள்பட 3 பேர் பலி!


மாஸ்கோ
:ரஷ்யாவின் காகஸஸ் பகுதியில் உள்ள தாஜஸ்தானில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர்களால் பள்ளிவாசல் இமாமும், இரண்டு உதவியாளர்களும் கொல்லப்பட்டுள்ளனர். அதிகாலை தொழுகைக்கு செல்லும் வழியில் இமாம் படுகொலைச் செய்யப்பட்டுள்ளார். காஸ்பியன் கடலோர நகரமான டெர்பெண்டில் அவரது வீட்டிற்கு அருகில் வைத்து இமாமும், அவரது உதவியாளர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர். கலீமுல்லாஹ் இப்ராஹீமோவ் என்ற 49 வயதான இமாம் அப்பகுதியில் சமாதான முயற்சிகளுக்கு தலைமை வகித்தவர் என்று ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மார்ச் மாதத்திற்கு பிறகு இப்பகுதியில் 3 இமாம்கள் படுகொலைச் செய்யப்பட்டுள்ளனர். ரஷ்ய அதிகாரிகளின் கொடூர சித்திரவதைகளுக்கு பலியாகும் செச்னியாவுக்கு அருகிலுள்ள தாஜஸ்தான் முஸ்லிம்கள் அதிகமாக வாழும் பகுதியாகும்.

திங்கள், 29 அக்டோபர், 2012

சச்சார் கமிட்டியின் பரிந்துரைகளை அமுலாக்க முயற்சிகள் எடுக்கப்படும்: அமைச்சர் ரஹ்மான்கான்


புது தில்லி:மத்திய அமைச்சரவையில் பெரிய மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. கேபினட் அந்தஸ்துள்ள புதிய அமைச்சர்களும், இணை அமைச்சர்களும் அறிவிக்கப்பட்டுளளனர்.
சச்சார் கமிட்டி அறிக்கையை அமுல்படுத்துவதற்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என்று மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சராக புதிதாகப் பதவி ஏற்றுள்ள கே.ரஹ்மான் கான் கூறினார்.

அமெரிக்காவை எதிர்த்தால் அவமானபடுத்துவதா? தனது கருத்தில் மாற்றம் இல்லை: இம்ரான் கான்


கனடா:பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரும், அந்நாட்டு அரசியல் கட்சி தலைவருமான இம்ரான் கான், நியூயோர்க் செல்லும் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றது முதல் தெக்ரிக்-இ-இன்சாப் எனும் கட்சியை தொடங்கி நடத்தி வரும் இம்ரான் கான், சமீபகா லமாக பாகிஸ்தானில் அமெரிக்காவின் ஆளில்லா ஏவுகணைகள் நடத்தும் தாக்குதல்களை கடுமையாக கண்டித்துவருகிறார். இந்நிலையில் தனது கட்சிக்கு நிதி சேர்க்கும் முகமாக நியூயார்க்கில் சொற்பொழிவு நிகழ்வொன்றில் கலந்து கொள்ள அமெரிக்காவுக்கு செல்ல தயாரானர் இம்ரான் கான். கனடாவின் டொரொண்டோவிலிருந்து நியூயார்க்கிற்கு செல்லும் வகையில் விமான நிலையத்திற்கு வந்து விமானத்தில் ஏறிய அவரை, நியூயார்க் புலனாய்வு அதிகாரிகள் வழிமறித்து கீழிறக்கினர். பின்பு, பாகிஸ்தானில் தலிபான்கள் இலக்குகள் மீது அமெரிக்கா ஆளில்லா விமான தாக்குதல்களை நடத்துவதை எதிர்ப்பதற்கு என்ன காரணம் என அவர்கள் கேள்வி கேட்டு விசாரித்துள்ளனர். இது குறித்து டுவிட்டரில் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ள இம்ரான் கான், தனது கருத்தில் எந்த மாற்றமும் இல்லை. பாகிஸ்தானில் அமெரிக்காவின் தாக்குதல்களை நிறுத்த வேண்டும். தாமதமானாலும் நியூயார்க்கில் உள்ள எனது கட்சியினரை தொடர்ந்து சந்திக்கவுள்ளேன் என கூறியுள்ளார். இதே வேளை இம்ரான் கான் நியூயார்க்கில் நடத்தவிருந்த சொற்பொழிவு இரத்து செய்யப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

சனி, 27 அக்டோபர், 2012

கசாபுக்கான ரூ .28 கோடி செலவுக்கு பொறுப்பு ஏற்பது யார்?


மும்பை: மும்பை தாக்குதலின்போது உயிருடன் பிடிபட்ட ஒரே தீவிரவாதியான அஜ்மல் கசாப், கடந்த 2008 முதல் மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அவன் மரண தண்டனையை எதிர்நோக்கி இருக்கிறான். சிறைக்குள்ளேயே கசாப் உயிருக்கு குறி வைக்கப்படலாம் என்று உளவுத்துறை எச்சரித்ததை தொடர்ந்து, துணை ராணுவப்படையை பாதுகாப்புக்கு அனுப்பி வைக்கும்படி மத்திய அரசை மகாராஷ்டிரா அரசு கேட்டுக் கொண்டது. இதையடுத்து, இந்தோ , திபேத் எல்லை பாதுகாப்பு படை கமாண்டோக்கள் 250 பேர் சிறைக்கு பாதுகாப்பு அளித்து வருகின்றனர். மேலும், கசாப் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அறையில் இருந்து, அதே சிறையில் இயங்கி வரும் சிறப்பு நீதிமன்றம் வரை 20 அடி நீளத்துக்கு குண்டு துளைக்காத சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. சிறைக்கு பாதுகாப்பு அளித்து வரும் கமாண்டோ படையினரு க்கு மாதம் ரூ .77 லட்சம் செலவாகிறது. இதுவரை மொத்தம் ரூ .28 கோடி செலவாகி இருக்கிறது. இந்த தொகையை யார் செலுத்துவது என்பது குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. கடந்த 2008, நவம்பர் 26ம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் நாட்டையே குறிவைத்து நடத்தப்பட்டது என்பதால் இந்த தொகையை மத்திய அரசுதான் ஏற்க வேண்டும் என்பது மாநில அரசின் வாதம். மத்திய உள்துறை அமைச்சகம் இதை ஏற்கவில்லை. கசாபின் பாதுகாப்புக்கு செலவிட வேண்டியது மகாராஷ்டிரா அரசின் கடமை என்கிறது மத்திய அரசு. எனவே, மகாராஷ்டிராவுக்கு ஒதுக்கப்படும் நிதியில் இருந்து இதை கழித்துக் கொள்ள மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

தற்கொலை படை தாக்குதல் : ஆப்கன் மசூதியில் 40 பேர் பலி


காபூல்: ஆப்கானிஸ்தான் மசூதியில், தற்கொலை படையினர், தாக்குதல் நடத்தியதில், 40 பேர் பலியாயினர்; 70 பேர் படுகாயமடைந்தனர். ஆப்கானிஸ்தானில், அமெரிக்க தாக்குதலுக்கு பிறகு, ஆட்சியை இழந்த தலிபான்கள், பல்வேறு நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஜனநாயக முறையில் நடந்த தேர்தல் மூலம், அதிபரான ஹமீத் கர்சாய், தலிபான்களை அமைதி வழிக்கு திரும்பும் படி வலியுறுத்தியுள்ளார்.
இதற்கிடையே, பர்யாப் மாகாணம், மேமானா என்ற இடத்தில் உள்ள மசூதியில், நேற்று, வெள்ளி கிழமை சிறப்பு தொழுகை நடந்தது. இந்த மாகாணத்தின் காவல் துறை தலைவரும், சிறப்பு தொழுகையில் கலந்து கொள்ள வந்திருந்தார். இதையொட்டி மசூதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. போலீஸ் உடையில் வந்த, தற்கொலை படை ஆசாமி, தன் உடலில் கட்டியிருந்த, வெடிகுண்டை வெடிக்க செய்ததில், 15 போலீசார் உள்பட, 40 பேர் உடல் சிதறி பலியாயினர். 70க்கும் அதிகமானோர், பலத்த காயம் அடைந்தனர்.

சிரியாவில் சண்டை நிறுத்தம் அமல்


டமாஸ்கஸ்: பக்ரீதையொட்டி, சிரியாவில் நான்கு நாட்களுக்கு, சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவில், அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவி விலகக் கோரி, கிளர்ச்சியாளர்கள், கடந்த, 18 மாதங்களாக போராடி வருகின்றனர். ஆசாத் பதவி விலக மறுப்பதால், கிளர்ச்சியாளர்களுக்கு, அமெரிக்கா, ஆயுதங்களை வழங்கி வருகிறது. இதனால், சிரியாவில், கடும் சண்டை நடக்கிறது. இரு தரப்பிலும் சமரசம் ஏற்படுத்துவதற்காக, அரபு நாடுகள் மற்றும், ஐ.நா.,வின் சார்பில், லக்தர் பிராமி நியமிக்கப்பட்டுள்ளார். பக்ரீதையொட்டி சண்டையை நிறுத்தும்படி, லக்தர் பிராமி கேட்டு கொண்டதன் பேரில், சிரிய அதிபர் பஷர் அல் ஆசாத், சண்டையை நிறுத்த ஒப்புக் கொண்டுள்ளார்.
"டிவி'யில் இது குறித்து, அதிபர் ஆசாத் கூறியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளாக, என்ன நடக்கிறது என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லை. அழிவு மற்றும் மரணம் தான் நடந்து கொண்டிருக்கிறது. இந்த சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டும். எல்லாரும் கடவுள் பக்கம் வர வேண்டும். பிரிவினை வாதிகளை முறியடிக்க வேண்டும். புதிய மத்திய கிழக்கை நாம் உருவாக்குவோம். சிரியாவின் எதிரிகள் இதை உருவாக்க நிர்பந்திப்பதை ஏற்க முடியாது. இவ்வாறு அவர் கூறினார். பக்ரீதையொட்டி, சிரியாவில் நான்கு நாள் விடுமுறை அறிவிக்கப் பட்டுள்ளது. இந்த விடுமுறையை மக்கள் கொண்டாடுவதற்கு வசதியாக, சண்டை நிறுத்தத்தை அமல்படுத்துவதாக அரசு தெரிவித்துள்ளது.

முஸ்லிம் பாடசாலையில் புகுந்த 10 பேருக்கு "வலை'


ஓசூர்: ஓசூர் அருகே கொத்தூர் முஸ்லிம் சிறுவர் பாடசாலையில் அத்துமீறி புகுந்து தாக்கிய வழக்கில், பஜ்ரங்தள் அமைப்பு மாவட்ட தலைவர் உள்ளிட்ட பத்து பேரை போலீஸார் தேடுகின்றனர். ஓசூர் அடுத்த கொத்தூர் ரிங் ரோட்டையொட்டி முஸ்லிம் சிறுவர்கள் படிக்கும் ஜமீயா மசூதிக்கு சொந்தமான அரேபியா மதரஸா பாடசாலை உள்ளது. நேற்று முன்தினம் மாலை இந்த பாடசாலைக்கு வந்த சிலர், பக்ரீத் பண்டிகைக்கு இறைச்சி வெட்டுவதற்காக மாடுகளை கட்டி வைத்துள்ளீர்களா? என கேட்டனர். பாடசாலை நிர்வாகிகள் இல்லை என தெரிவித்தனர். அதற்கு அந்த நபர்கள், "மாட்டை வெட்டினால் உங்களை வெட்டுவோம், ' என மிரட்டினர். இதை அங்குள்ளவர்கள் தட்டி கேட்டுள்ளனர். ஆத்திரமடைந்த அந்த நபர்கள், அவர்களை சரமாரியாக தாக்கி சென்றனர். இச்சம்பவத்தால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. எஸ்.பி., அசோக்குமார், டி.எஸ்.பி., கோபி மற்றும் போலீஸார், சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். புகாரின்பேரில், பஜ்ரங்தள் அமைப்பு மாவட்ட தலைவர் தேவராஜ், பெரியார் நகர் சக்தி, கஜா உள்ளிட்ட பத்து பேரை போலீஸார் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஓசூர் பகுதியில் அமைந்துள்ள முஸ்லிம் மசூதிகளில் பக்ரீத் பண்டிகையொட்டி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பக்ரீத் விழாவில் தே.மு.தி.,க., தலைவர் பங்‌கேற்பு


மதுரை: மதுரை கோரிப்பாளையம் தர்கா தெருவில் உள்ள பள்ளிவாசலில் ‌தே.மு.தி.க.,வினர் சார்பில் பக்ரீத் விழா கொண்டாடப்படுகிறது. இவ்விழாவில் கட்சி தலைவர் விஜயகாந்த் தனது மனைவி பிரேமலதாவுடன் கலந்து கொண்டுள்ளார்.

வியாழன், 25 அக்டோபர், 2012

பக்ரீத் பண்டிகை தலைவர்கள் நல்வாழ்த்து


தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து : சென்னை: பக்ரீத் பண்டிகை கொண்டாடும் இஸ்லாமிய பெருமக்களுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா வாழ்த்து செய்தியினை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இஸ்லாமியப் பெருமக்கள் இறை நினைவோடும், தியாகச் சிந்தனையோடும், பக்ரீத் திருநாளைக் கொண்டாடி மகிழும் இந்த இனிய நாளில், எனது உள்ளம் கனிந்த பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இறைவனுக்காக எதையும் தியாகம் செய்யும் எண்ணத்தை மேலோங்கச் செய்யும் நன்நாளாகவும், ஏற்றத் தாழ்வுகளை அகற்றி அனைவரும் ஒன்று கூடி இறைவனின் புகழை நெஞ்சத்தில் நிலைக்கச் செய்து, விருந்தளித்து மகிழ்ச்சியில் திளைக்கும் திருநாளாகவும் கொண்டாடப்படுவதே பக்ரீத் திருநாளாகும். இறைவனின் விருப்பத்திற்கு ஏற்ப தன் ஒரே மகனான இஸ்மாயிலை பலியிடத் துணிந்த இறைத்தூதர் இப்ராகிம் அவர்களின் தன்னலமற்ற தியாகத்தினை உலகுக்கு உணர்த்தும் உன்னத நாள் இத்திருநாள் ஆகும். நபிகள் நாயகம் போதித்த அன்பு, அமைதி, மனிதநேயம் தழைத்தோங்க, அனைவரும் அன்னாரின் உன்னதமான வழியினைப் பின்பற்றி பாசமிக்க சகோதர, சகோதரிகளாய் மன வேறுபாடுகளைக் களைந்து ஒற்றுமையுடன் வாழ இந்தத் தியாகத் திருநாளாம் பக்ரீத் திருநாளில் உறுதியேற்போம். இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்வோடு கொண்டாடும் இந்த இனிய திருநாளில் எல்லோரிடமும் இறை உணர்வும், தியாகச் சிந்தனையும், சகோதரத்துவமும் மலரட்டும்; அது மனித குல நல்வாழ்விற்கு மகோன்னதமாய் வழிகோலட்டும் என வாழ்த்தி, மீண்டும் ஒரு முறை எனது பக்ரீத் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமுமுக தலைவரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி : சமூக அவலம் களைய உறுதி ஏற்போம். தமுமுக தலைவரின் ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் ஜே.எஸ்.ரிஃபாயி அவர்களின் பெருநாள் வாழ்த்துச் செய்தி: ‘‘தியாகத் திருநாளாம் ஹஜ்ஜுப் பெருநாள் தியாகத்தின் மேண்மையைப் பறைசாற்றும் தினமாகும். சமூக அவலங்களான வன்முறை, வறுமை, சுற்றுச்சூழல், சீர்கேடு, லஞ்ச ஊழல் முறைகேடுகள், மக்களின் ஜீவாதார உரிமைகளை ஆதிக்க சக்திகள் தடுத்தல் உள்ளிட்ட உலகளாவிய தீமைகளை, சமூக அவலங்களைக் களைய நாம் தியாகம் செய்யத் தயாராவோம். விட்டுக் கொடுத்தல், தம்மிடம் உரியமை இல்லாதார்க்கு வழங்குதல், உரிமைகளை அறத்தின் வழிநின்று போராடுதல் என்ற அம்சங்களை வீடுதோறும் பரப்பி மானுட சமூகம் மேம்பட அனைவரும் ஒருங்கிணைவோம்’’

ஏமன் அதிகாரிகள் 2 பேர் சுட்டுக்கொலை


சானா: பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள ஏமன் பாதுகாப்பு அதிகாரிகள் 2 பேர் பயங்கரவாதிகளால் சுட்டு கொல்லப்பட்டனர். மர்ம நபர்கள் மோட்டார் பைக்கில் சென்ற படி சுட்டு சென்றனர்.

ஆப்கன் சண்டையில் பலியான அமெரிக்க நாய், பூனைகளுக்கு விருது


லண்டன்:ஆப்கானிஸ்தானில்,ராணுவ வீரர்களுடன் பணியில் ஈடுபட்ட போது, உயிரிழந்த அமெரிக்க நாய்க்கு, வீர தீர செயலுக்கான பதக்கம் வழங்கப் பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில், அமெரிக்க வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுடன் மோப்ப நாய்களும் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. ஆப்கானிஸ்தானில், ஐந்து மாத காலம் பணியில் ஈடுபட்ட, "தியோ' என்ற நாய், தலிபான்கள் வைத்த வெடி குண்டுகளையும், வெடி மருந்து பொருட்களையும் கண்டுபிடித்தது. இதன் மூலம் அமெரிக்க வீரர்கள் பலர் உயிர் பிழைத்தனர். எனினும், கடந்த ஆண்டு, மார்ச் மாதம், தலிபான்களின் தாக்குதலில், அமெரிக்க வீரர்களுடன், தியோவும் பலியானது. வீர தீர செயல் புரியும் விலங்குகளுக்கும், பறவைகளுக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த பி.டி.எஸ்.ஏ., என்ற அமைப்பு, சாதனை பதக்கம் வழங்கி கவுரவித்து வருகிறது. இந்த வகையில், தியோவுக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது. இதுவரை இந்த விருது, 64 பிராணிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இதில் 27 நாய்களும், 32 புறாக்களும், மூன்று குதிரைகளும், ஒரு பூனையும் அடக்கம். என்ன ஒரு அக்கறை Mr. ஒபாமா ? . நாய்க்கெல்லாம் விருது. எப்டியும் இனம் இனத்தோடதனே சேரும்.

வளைகுடா நாடுகளில் இன்று ஹஜ்ஜு பெருநாள் :


துபாய்:இறைத்தூதர் ஹஸ்ரத் இப்றாஹீம் (அலை) அவர்களின் அரும் தியாகத்தை நினைவுகூரும் ஈதுல் அழ்ஹா – பக்ரீத் பண்டிகை இன்று அரபுலகம் எங்கும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபி, துபாய், ஷார்ஜா, அல்அய்ன், அஜ்மான், ஃபுஜைரா, உம்மல் குய்ன் மற்றும் ராசல்கைமா ஆகிய இடங்களில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
அமீரகத்தின் துபாய் நகரில் உள்ள தேரா ஈத்கா திடலில் மக்கள் பெருநாள் சிறப்புத் தொழுகையை தொழுதனர். இது போல் மலைகுடா நாடுகளான சவூதி அரேபியா , ஓமன், பஹரின் உள்ளிட்ட நாடுகளிலும், சில ஆப்ரிக்க நாடுகளிலும் , இந்தியாவில் கேரளாவில் சில பகுதிகளிலும், தமிழகத்தின் குமரி மாவட்டத்தில் ஒரு சில ஊர்களிலும் இன்று ஹஜ் பெருநாள் தொழுகையும், பண்டிகை கொண்டாட்டங்களும் நடை பெற்றன. பெண்களும் தொழுகையில் கலந்து கொண்டு தங்களுக்குள் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர். தமிழகம் மற்றும் இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் நாளை பெருநாள் கொண்டாடப்படுகிறது.

மியான்மரில் மீண்டும் கலவரம் : 10 க்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் மரணம்.


நேய்பிடவ்:மியான்மரின் (முன்பு பர்மா) மேற்கு ரக்ஹினே மாநிலத்தின் சித்வே நகரில் உள்ள இரண்டு முஸ்லிம் கிராமங்களில் புத்த மத தீவிரவாதிகள் உள்ளே நுழைந்து தீ வைத்தார்கள். இதில் குறைந்தபட்சம் 11 ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்தக் கோரச் சம்பவத்தை அரங்கேற்ற வந்த ஏராளமான புத்த மத தீவிரவாதிகளை இராணுவமும், எல்லைப் பாதுகாப்புப் படையும் தடுக்காமல் இருந்துள்ளனர். இதனால் தைரியம் பெற்ற புத்த மத வெறியர்கள் மம்ரா, மிரவ்ட் ஆகிய கிராமங்களில் உள்ள முஸ்லிம் வீடுகளுக்கு தீ வைத்தனர் என்று ரேடியோ பங்கா வானொலி கூறுகிறது.
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு நடக்கும் அநியாயங்களுக்கு எதிராக மனித உரிமை அமைப்புகள் அமைதி காப்பதால் மியான்மரின் அரசுப் படைகளுக்கும், புத்த வெறியர்களுக்கும் எந்தவித பயம் இல்லாமல் போய்விட்டது. மியான்மரின் பெருன்பான்மையினரின் மதமான புத்த அரசாங்கம் ரோஹிங்கியா முஸ்லிம்களை சட்ட விரோதமாக குடிபெயர்ந்ததாக கருதுவதால் அவர்களை அங்கீகரிக்க மறுக்கிறார்கள். மேலும் ரோஹிங்கியா முஸ்லிம்கள் பாரசீக, துர்க்கி, பெங்காலி, பதான் முஸ்லிம்களின் வழித் தோன்றல்களாகக் கூறப்பட்டாலும் அவர்கள் எட்டாம் நூற்றாண்டில் குடி பெயர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆகஸ்ட் 10 முதல் அரசுப் படைகளும், புத்த வெறியர்களும் முஸ்லிம்களின் கிராமங்களை எரித்து அழிச்சாட்டியம் புரிவதால் ஆயிரக்கணக்கான ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதி முகாம்களில் மோசமான நிலைமையில் வாழ்ந்து கொண்டிருப்பதாக அறிக்கைகள் தெரிவிகின்றன. அண்மைக் காலமாக நாட்டின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள ரக்ஹினே மாநிலத்தில் சுமார் 650 ரோஹிங்கியா முஸ்லிம்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். 1200 பேர் காணாமல் போய் உள்ளார்கள். 80000 பேர் நாட்டை விட்டு இடம் பெயர்ந்து சென்றுள்ளார்கள்.

“ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை தடுத்தே தீருவேன்!” : பராக் ஒபாமா சபதம்

வாஷிங்டன்:அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா தான் பதவியில் நீடிக்கும் வரை ஈரான் அணு
ஆயுதம் தயாரிப்பதை ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன் என்று உறுதி பூண்டுள்ளார். அமெரிக்க அதிபர் பதவிக்கு ஜனநாயகக் கட்சியின் சார்பில் பராக் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து குடியரசுக் கட்சியின் சார்பாக மிட் ரோம்னி போட்டியிடுகிறார். இருவருக்கும் இடையே தொலைக்காட்சியில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. இரண்டு விவாதங்களுக்குப் பிறகு மிட் ரோம்னியின் கை சிறிது ஓங்கியிருந்தது. மூன்றாம் கட்டமாக நடந்த விவாதத்தில், “நான் அமெரிக்காவின் அதிபராக இருக்கும் வரையில் ஈரானுக்கு ஒரு அணு ஆயுதம் கூட கிடைக்க விடமாட்டேன்” என்று பராக் ஒபாமா கூறினார். மேலும், இஸ்ரேல் தங்களுடைய உண்மையான நண்பன் என்றும், தங்களுடைய பகுதியின் மிகப் பெரிய நட்பு நாடு என்றும் கூறி தன் இஸ்ரேலிய பாசத்தை வெளிப்படுத்தினார். இஸ்ரேல் தாக்கப்பட்டால், அமெரிக்கா இஸ்ரேலுக்கு தோள் கொடுக்கும் தோழனாகத் திகழும் என்பதை தான் அதிபர் ஆன காலம் முதல் தெளிவு படுத்தி உள்ளதாக ஒபாமா கூறினார். முன்னதாக “அணு ஆயுத ஈரான் உலகிற்கு ஒரு மிக பெரிய அச்சுறுத்தல்” என்றும், அது ஒபாமாவின் பயங்கரவாதக் கட்டமைப்புக்கு எதிராக உள்ளது என்றும் ரோம்னி தனது விவாதத்தில் தெரிவித்திருந்தார். இந்த மூன்றாம் கட்ட விவாதத்திற்குப் பிறகு, ஈரான் குறித்த “புரட்சிகர” கருத்துகளை திருவாய் மலர்ந்ததற்குப் பிறகு ஒபாமாவின் கை சிறிது ஓங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பொதுத்தேர்தலில் போட்டி: முஷாரப் முடிவு


இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் நடக்க உள்ள பொதுத்தேர்தலில் போட்டியிடப்போவதாக முன்னாள் அதிபர் முஷாரப் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானில் கடந்த 1999-2008-ம் ஆண்டு வரை அதிபராகவும், ராணுவ சர்வாதிகாரியாகவும் இருந்தவர் பர்வேஷ் முஷாரப் (69). தற்போது நாட்டை விட்டு வெளியேறி லண்டன், துபாய் ஆகிய நகரங்களில் மாறி மாறி வசித்து வருகிறார். அனைத்து பாகிஸ்தான் முஸ்லிம் லீக் என்ற கட்சியை துவக்கியுள்ள அவர், பாக்.கின் முன்னாள் பிரதமர் பெனசிர்பூட்டோ கொலை வழக்கில் இன்டர்போல் அமைப்பினால் தலைமறைவு குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளார். இந்த சூழ்நிலையில் பாக்.கில் நடக்க உள்ள பொதுதேர்தலில், கைபர் பக்துன்ஹவா மாகாணத்தில், சிட்ரால் தொகுதில் போட்டியிடப்போவதாக, அறிவித்துள்ளார். இதனை அவரது கட்சியின் மூத்த நிர்வாகி சையீப் கூறினார்.

பக்ரீத்தை கொண்டாட சிரியாவில் சண்டை நிறுத்தம்


டமாஸ்கஸ் : பக்ரீத்தையொட்டி, சிரியாவில் சண்டை நிறுத்தத்தை மேற்கொள்ள, அதிபர், பஷர் அல் ஆசாத் ஒப்புக்கொண்டு உள்ளார். சிரியாவில், அதிபர் பஷர் அல் ஆசாத்தை பதவி விலகக்கோரி, கிளர்ச்சியாளர்கள், கடந்த, 18 மாதங்களாக போராடி வருகின்றனர். ஆசாத் பதவி விலக மறுப்பதால், கிளர்ச்சியாளர்களுக்கு, அமெரிக்கா, ஆயுதங்களை வழங்கி வருகிறது. இதனால், சிரியாவில், கடும் சண்டை நடக்கிறது. இருதரப்பிலும் சமரசம் ஏற்படுத்துவதற்காக, அரபு நாடுகள் மற்றும் ஐ.நா.,வின் சார்பில், லக்தர் பிராமி நியமிக்கப்பட்டு உள்ளார். கெய்ரோ நகரில், இதுகுறித்து பிராமி குறிப்பிடுகையில், "பக்ரீத்தையொட்டி, சண்டை நிறுத்தம் மேற்கொள்வது குறித்து, இருதரப்பிலும் பேசினேன். போர் நிறுத்தத்துக்கு, இருதரப்பிலும் ஒப்புதல் தெரிவித்துள்ளனர். எனினும் இது தொடர்பான அதிகார அறிவிப்பை சிரியா அரசு, 25ம் தேதி வெளியிடுகிறது' என்றார்.

பாக்‌. சிறையில் இருந்து இந்தியர் விடுதலை


மும்பை: பாக். சிறையில் 8 ஆண்டுகள் இருந்த இந்தியர் ஒருவர் இன்று விடுதலையானார். மும்பை‌யைச் சேர்ந்தவர் பாவேஷ் பார்மர் (44). இவர் கடந்த 8 எட்டு ஆண்டுகளுக்கு முன் வழக்கு ஒன்றில் சிக்கி, பாக்., சிறையி்ல் அடைக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அவர் விடுதலையானார். பாக்.எல்லையான அட்டாரி எல்லை வழியாக அவர் இந்தியா வந்தார். அவரை உறவினர்கள் வரவேற்றனர்.

புதன், 24 அக்டோபர், 2012

லண்டன் ஒலிம்பிக்கில் முஸ்லிம்கள் அதிக பதக்கம் :


2012 ஒலிம்பிக் லண்டன் நகரில் நடந்து வருகிறது. இதில் முஸ்லிம் ஒலிம்பிக் விளையாட்டு வீரர்கள் 65 பேர் பதக்கம் வென்றுள்ளனர். இது கடந்த முறை பிஜிங்கில் நடந்த ஒலிம்பிக்கில் வென்ற பதக்கங்களை விட 44 பதக்கங்கள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் முஸ்லிம் பெண்கள் 18 பதக்கங்கள் வாங்கியுள்ளனர். இது கடந்த முறையை விட இரண்டு மடங்கு அதிகம் . மேலும் பல்வேறு முஸ்லிம் நாடுகளில் இருந்து 400 முஸ்லிம் வீராங்கனைகள் இந்த போட்டிகளில் கலந்து கொண்டனர். இந்த ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத ஒரே முஸ்லிம் நாடு பெனின். டென்னிஸ் விளையாட்டில் எந்த முஸ்லிம் நாட்டு வீரர்களும் கலந்து கொள்ளவில்லை.

செவ்வாய், 23 அக்டோபர், 2012

கஷ்மீரில் வனப்பகுதி நிலம் வேறு நோக்கங்களுக்கு ஒதுக்கீடு! – சி.ஏ.ஜி அறிக்கையில் தகவல்!


ஸ்ரீநகர்:கஷ்மீர் மாநிலத்தில் வனப்பகுதி நிலம் வேறு நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்று comptroller and audit general of india(சி.ஏ.ஜி) அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, இம்மாதம் வெளியிடப்பட்ட சி.ஏ.ஜி. அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது: தேசிய வனக் கொள்கையின்படி, மொத்த நிலத்தில் குறைந்தபட்சம் 33 சதவீதம் வனப்பகுதியாக இருக்க வேண்டும். ஆனால் ஜம்மு கஷ்மீரில் அந்த அளவை விட மிகவும் குறைவாக 25 சதவீத வனப்பகுதி நிலம் மட்டுமே உள்ளது. இந்த 25 சதவீத நிலத்திலும் வெறும் 1,063 ஹெக்டேர் (ஒரு சதவீதம்) நிலம் மட்டுமே மறுவரையறை செய்யப்பட்டுள்ளது. 1991-92 முதல் 2010-11 வரையிலான காலகட்டத்தில் 1,883.23 ஹெக்டேர் வனப்பகுதி நிலம் வேறு நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்டதை ஆவணங்கள் காட்டுகின்றன. இதற்குப் பதிலாக, வேறு எந்த நிலமும் வனப்பகுதி பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்படவில்லை. கஷ்மீர் மாநில வனப் பாதுகாப்புச் சட்டத்தின்படி, வேறு நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்ட வனப்பகுதி நிலம் போல் இரு மடங்கு நிலத்தில் காடுகள் வளர்க்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அப்படிச் செய்யப்படவில்லை என்று சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிளியனூரில் இறந்த குழந்தையின் ஜனாஸா அடக்கத்தில் அத்துமீறல் :


கடந்த 20 அக்டோபர் 2012 சனிக்கிழமை மாலை 3 மணிக்கு நாகை மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக, கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 15 அக்டோபர் 2012 அன்று நாகை மாவட்டம் கிளியனூரில் இறந்த குழந்தையின் ஜனாஸா நடந்துள்ளத கண்டித்து இப்போராட்டம் நடைபெற்றது. இதற்கு முழுமுதற்காரணமான பாலையூர் ஆய்வாளர் சாமிநாதன், இறந்த குழந்தையின் ஜனாஸாவிற்கு உரிமையுடைய தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்திற்கு எதிராக பேச்சு வார்த்தை என்ற பெயரில் TNTJ வைத் சேர்ந்த ஐவரை அழைத்துச் சென்று அவர்கள் மேல் கொலைவெறி தாக்குதல் நடத்த தூண்டியுள்ளார். அவரை பணி நீக்கம் செய்து, கைது செய்ய கோரியும், தாக்குதலுக்கு ஆளானவர்கள் மீதே பொய்வழக்கு போட்டு கைது செய்யப்பட்ட TNTJ சகோதரர்களை உடனடியாக விடுதலை செய்து, வழக்குகளை ரத்து செய்ய கோரியும், தாக்குதல் நடத்திய ரவுடிகளை உடனடியாக கைது செய்ய கோரியும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். தாவுத் கைசர் அவர்கள் கண்டன உரையாற்றினார்க்ள. கடும் மழையையும் பொருட்படுத்தாமல் பெண்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். எங்களது நியாயமான கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், தமிழக முதல்வர் வீடு முற்றுகை போராட்டத்தை நடத்துவோம் என போராட்டத்தில் கோசங்கள் எழுப்பப்பட்டது.

ஜித்தாவில் குடும்ப ஒருங்கிணைப்பு பல்சுவை நிகழ்ச்சி


ஜித்தா: சவூதி அரேபியா தஃபாரெஜ்- ஜித்தா அமைப்பின் குடும்ப ஒருங்கிணைப்பு பல்சுவை நிகழ்ச்சி ஜித்தாவில் நடந்தது. ஏராளாமான தமிழர்கள் குடும்பத்துடன் கலந்துக்கொண்டனர். இந்நிகழ்ச்சியில் குழந்தைகளுக்கான அறிவுத்திறன் போட்டி, ஓட்டப்பந்தயம், மியூஸிக்கல் சேர், டங் ட்விஸ்டர் போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. பெண்களுக்கு பிரத்தேகமாக ஸ்கிப்பிங், அறிவுத்திறன் போட்டி, ஓட்டப்பந்தயம், நடத்தப்பட்டன. அதுபோல் ஆண்களுக்காக அறிவுத்திறன் போட்டி, ஓட்டப்பந்தயம், மியூஸிக்கல் சேர், வாலிபால், கயிறு இழுத்தல், டங் ட்விஸ்டர் போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நிகழ்ச்சியின் இடையில் மௌலவி. நூஹ் அல்தாபியின் மார்க்க சொற்பொழிவு நடந்தது. வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

மும்பை தாக்குதல் அஜ்மல் கசாப் கருணை மனு உள்துறை அமைச்சகம் நிராகரித்தது


மும்பை: மும்பை தாக்குதல் வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்ட, லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதி, அஜ்மல் கசாப், தனக்கு கருணை காட்டக்கோரி அனுப்பிய கருணை மனுவை மத்திய நிராகரித்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில், 2008 நவம்பர், 26ல், லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகள், 10 பேர் தாக்குதல் நடத்தினர். இந்த படுபயங்கர தாக்குதலில், 166 பேர் கொல்லப்பட்டனர். அதே நேரத்தில், போலீசார் நடத்திய பதில் தாக்குதலில், பயங்கரவாதிகள் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும் சிக்கினான். அவன் மீதான விசாரணை, மும்பை ஆர்தர் ரோடு சிறையில் அமைக்கப்பட்ட, சிறப்பு கோர்ட்டில், நடைபெற்றது; அதில், அவனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின், இந்தத் தண்டனையை, மும்பை ஐகோர்ட் உறுதி செய்தது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தான். சுப்ரீம் கோர்ட், ஆகஸ்ட், 29ல், அவனுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை உறுதி செய்தது. இந்நிலையில், தனக்கு கருணை காட்டக்கோரி, ஜனாதிபதிக்கு மனு ஒன்றை அனுப்பினான். இந்த மனு கடந்த செப்டம்பர் மாதம் மகாராஷ்டிர உள்துறை அமைச்சகத்தால் நிராகரிக்கப்பட்டது. பின்னர் இந்த மனு, முதல்வர் அலுவலகம் மூலமாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பப்பட்டது. தற்போது கசாப்பின் கருணை மனுவை மத்திய உள்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது. மேலும், ஜனாதிபதியும் கசாப்பின் மனுவை நிராகரிக்கும்படி பரிந்துரை செய்துள்ளது.

சவூதி அதிகாரிகளால் கைதுச் செய்யப்பட்ட முஸ்லிம் பொறியாளர் இந்தியாவிடம் ஒப்படைப்பு


புதுடெல்லி:சவூதி அரேபியாவின் ஜுபைலில் வைத்து கடந்த மே மாதம் சவூதி அதிகாரிகளால் கைதுச் செய்யப்பட்ட பீகாரைச் சார்ந்த இளம் முஸ்லிம் பொறியாளர் ஃபஸீஹ் மஹ்மூத் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டார். நேற்று காலை டெல்லி விமானநிலையத்திற்கு அழைத்து வரப்பட்ட ஃபஸீஹை டெல்லி போலீஸ் கைதுச் செய்தது.
பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடிய குண்டுவெடிப்பு, 2010-இல் டெல்லி ஜும்ஆ மஸ்ஜித் குண்டுவெடிப்பு ஆகிய வழக்குகளில் ஃபஸீஹிற்கு தொடர்பு இருப்பதாகவும், அவர் லஷ்கர்-இ- தய்யிபா இயக்கத்தின் உறுப்பினர் என்றும் போலீஸ் கூறுகிறது.துவக்கத்தில் ஃபஸீஹ் இந்திய முஜாஹிதீன் உறுப்பினர் என்று போலீஸ் கூறியது குறிப்பிடத்தக்கது. ஃபஸீஹ் சவூதியில் வைத்து கைதுச்செய்யப்பட்டு ரகசிய இடத்தில் காவலில் வைக்கப்பட்ட சம்பவம் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.தன்னை தடுத்து வைத்துவிட்டு ஃபஸீஹை இந்தியா மற்றும் சவூதி அதிகாரிகள் பிடித்துச் சென்றதாக அவரது மனைவி நிகாத் பர்வீன் உச்சநீதிமன்றத்தில் மனு அளித்திருந்தார். ஃபஸீஹ் எங்கிருக்கிறார்? என்று உச்சநீதிமன்றம் சி.பி.ஐ மற்றும் மத்திய அரசிடம் கேள்வியை தொடுத்தது. ஆனால், மத்திய அரசு முறையான பதிலை அளிக்காமல் மழுப்பி வந்தது.இந்நிலையில் நீதிமன்றம் கடுமையான எச்சரிக்கையை விடுத்தை தொடர்ந்து, ஃபஸீஹ் சவூதி அரேபியா அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் இருப்பதாக உச்சநீதிமன்றத்தில் சி.பி.ஐ தெரிவித்தது. இண்டர்போலும் ஃபஸீஹிற்கு எதிராக ரெட் கார்னர் நோட்டீஸை வெளியிட்டிருந்தது. கூடுதல் ஆதாரங்களை ஃபஸீஹை இந்தியாவிடம் ஒப்படைக்க சவூதி அரேபியா அதிகாரிகள் கேட்டதாகவும் செய்தி வெளியனது. இதனைத் தொடர்ந்து ஐந்து மாதங்களுக்கு பிறகு ஃபஸீஹ் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் பெங்களூர், டெல்லி குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவர் என்று கூறி கர்நாடகா போலீஸ் தங்களிடம் ஒப்படைக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அதேவேளையில் ஃபஸீஹை இந்தியாவிடம் ஒப்படைத்த சவூதி அரேபியாவின் நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது என்று இந்திய உள்துறைச் செயலாளர் ஆர்.கே.சிங் கூறியுள்ளார். இந்தியாவில் கைது செய்யப்பட்ட 13 இந்திய முஜாஹிதீன் உறுப்பினர்களுக்கு ஃபஸீஹ் உதவினார் என்று ஆர்.கே.சிங் கூறுகிறார்.

ஐ.நா அமைதிப்படை பாதுகாப்பு பணியில் பாலியல் மோசடி


புதுடெல்லி:ஆப்பிரிக்க நாடான காங்கோ நாட்டில் கலவரத்தை கட்டுப்படுத்த ஐ.நா அமைதிப்படை பாதுகாப்பு பணியை மேற்கொண்டது. இப்படையில் இந்திய ராணுவ வீரர்களும் இடம்பெற்றிருந்தனர். காங்கோவில் ஒரு ஹோட்டலில் வைத்து விபச்சார குற்றத்தில் ஈடுபட்டவர்களுடன் இந்திய மேஜர் ஒருவரும் கைதுச் செய்யப்பட்டார். இதுத்தொடர்பான விசாரணை நடந்துவரும் சூழலில் அவருக்கு எதிராக இன்னொரு வழக்கும் தொடுக்கப்பட்டது. தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக ஒரு பெண் பிரிட்டோரியா போலீஸில் அளித்த புகாரின் பேரில் அமைதிப்படையில் இடம் பெற்றிருந்த 3 இந்திய ராணுவ வீரர்கள் மீது வழக்கு தொடுக்கப்பட்டது. இந்நிலையில் இக்குற்றங்களுக்கு முதல்கட்ட ஆதாரம் உள்ளதாக ஐ.நா, இந்தியாவிடம் தெரிவித்துள்ளது.

நைஜீரியா குண்டு வெடிப்பில் பத்துக்குமேற்பட்டோர் பலியாகியிருக்க வாய்ப்பு :


நைஜீரியாவின் வட கிழக்கு மாநிலமான யோபெயில் நேற்று அதிசக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் குறைந்தது 13 பேர் பலியாகியிருக்க வாய்ப்பு இருப்பதாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர் . இது குறித்து விரிவான அறிக்கை விரைவில் வெளியிடப்படும் என்று அந்நாட்டு ராணுவ கூட்டு படை செய்தியாளர் lt எலி லஜாருஸ் தெரிவித்துள்ளார். இந்த பொடுகிஸ்தான் பகுதி மக்கள் நெருக்கமான பகுதி மேலும் santhai கூடும் நாள் என்பதால் அதிகமான மக்கள் கூட்டம் இருந்தது.

திங்கள், 22 அக்டோபர், 2012

எகிப்தின் அரசியல் நிபுணர்களில் பாதி பேர் பெண்கள் :


இதுவரை இல்லாத அளவுக்கு எகிப்தின் அரசியல் நிபுணத்துவ வரலாற்றிலேயே முதல் முறையாக் அரசியல் நிபுணர் பட்டம் பெற்றவர்களில் பாதி பேர் பெண்கள் என்று அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் முஹம்மத் கமல் அமர் தெரிவித்துள்ளார். மேலும் பெண்கள் இந்த துறையில் உயர்ந்த இடத்தில் செல்வார்கள் என்று பட்டமளிப்பு விழாவில் பேசிய அமர் தெரிவித்துள்ளார். இந்த செய்தியை அந்நாட்டு inaiya தளம் ஒளிபரப்பியுள்ளது. மொத்தம் 41 பேரில் பாதிக்கும் அதிகமானவர்கள் பெண்கள் , இதில் பலர் ஹிஜாப் அணிந்திருந்தனர்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டி ஏற்பாடுகள்:ரஷ்யாவில் போராளி குழுக்களை சேர்ந்த 49 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை :


மாஸ்கோ:ரஷ்யாவில் குளிர்கால ஒலிம்பிக் போட்டிக்கு முன்னேற்பாடாக, பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகள் என்ற பெயரில் கொலை நடவடிக்கை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையில், 49 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டு கொன்றுள்ளனர்.ரஷ்யாவில், முஸ்லிம்கள் அதிகம் உள்ள வடக்கு காகசஸ், செசன்யா உள்ளிட்ட மாகாணங்களில், பயங்கரவாதிகள் நடமாட்டம் உள்ளது என்று இந்த துப்பாக்கி சூடு அடைபெற்று வருகிறது.பயங்கரவாதிகள் வரும் 2014ம் ஆண்டு நடக்க உள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியையும் குலைக்க சதி திட்டம் தீட்டியுள்ளதாக, ரஷ்ய புலனாய்வு அமைப்பு எச்சரித்துள்ளது. ரஷ்ய அதிபரான புடின், முன்னாள் புலனாய்வு தலைவர் என்ற முறையில், பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கைகளை முடுக்கிவிட்டுள்ளார்.ரஷ்ய பாதுகாப்பு படையினர், வடக்கு காகசஸ் பகுதியில், நேற்று மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் போராளி அமைப்பின், ஒன்பது தலைவர்கள் உள்பட, 49 பேர் கொல்லப்பட்டனர். 30 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து நவீன ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

ஹஜ் பயணிகளுக்காக ரியாதில் மாபெரும் இரத்த தான முகாம்! 150 லிட்டர் இரத்தம் தானம்!


இரத்த தானங்கள் செய்து உயிர்களைக் காப்பதில் தொடர்ந்து ஐந்து வருடங்களாக தமிழகத்தில் முதலிடத்தில் இருந்து வரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பல கேடயங்களையும் பாராட்டுக்களையும் பெற்றதை அனைவரும் அறிவர். தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களிலும் வெளிநாடுகளிலும் இந்த இரத்ததான சேவையை அது செய்து வருகின்றது. தற்போது உலகம் முழுவதிலிருமிருந்து முஸ்லிம்கள் ஹஜ் செய்வதற்காக மக்கா மாநகருக்கு வந்திருப்பதால் அவர்களில் தேவைப்படுவோருக்கு அவசர காலத்தில் வழங்குவதற்காக ஒரு முகாமை ஏற்பாடு செய்ய வேண்டுமென கிங் ஃபஹத் மெடிக்கல் சிட்டி மருத்துவமனையினர் (KFMC) ரியாத் TNTJ-விடம் வேண்டுகோள் விடுத்தனர். அதனை ஏற்ற ரியாத் TNTJ, கடந்த 19.10.2012 வெள்ளிக்கிழமையன்று மாபெரும் 21 ஆவது இரத்த தான முகாமை நடத்தியது. இது ஹஜ் பயணிகளுக்காக ஒவ்வொரு வருடமும் தொடர்ச்சியாக நடத்தப்பெறும் 6 ஆவது முகாம் ஆகும். இந்த முகாமில் 375 க்கும் மேற்பட்ட சகோதர-சகோதரிகள் கலந்து கொண்டனர். காலை 9 மணிக்கு துவங்கும் என அறிவிக்கப்பட்ட முகாமில், கொடையாளிகள் கூட்டம் அலை மோதியதால், காலை 8.45 மணிக்கே துவங்கியது.
இம்முகாமில் பெண்கள் உட்பட 333 பேரிடம் மட்டும் இரத்தம் பெறப்பட்டது. இரத்த அழுத்தம் அதிகம், ஹீமோகுளோபின் குறைவு, ஹஜ்ஜூக்கான தடுப்பூசி போன்ற காரணங்களுக்காக பல சகோதர-சகோதரிகளால் இரத்தம் வழங்க முடியவில்லை. காலையிலிருந்து தொடர்ச்சியாக பணியாற்றும் இரத்த வங்கி ஊழியர்கள் களைப்புற்ற காரணத்தால், இத்துடன் முடித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ள மாலை 5.15 மணியோடு இரத்த தானம் நிறுத்திக் கொள்ளப்பட்டது. 2011 இல் நடந்த ஹஜ்ஜூக்கான முகாமில் 135 லிட்டர் இரத்தம் பெறப்பட்டது. இம்முறை 150 லிட்டர் இரத்ததிற்கு மேல் பெறப்பட்டது இதுவே முதல் முறை. இரத்த தானம் செய்தவர்கள் அனைவருக்கும் காலை சிற்றுண்டியும், சிறப்பு மதிய உணவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ரியாத் மண்டலத்தின் இரத்த தான பொறுப்பாளர்கள் சகோ. அப்துர்ரஹ்மான் நவ்லக், சகோ. மாஹீன் & சகோ. ஷேக் அப்துல் காதர் மற்றும் மண்டல நிர்வாகிகளின் ஏற்பாட்டில், சிறப்பாக முன்னேற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

வெளிச்சத்துக்கு வந்தது விடுதலைப்புலிகளின் மறுபக்கம்


தங்களின் நம்பிக்கை துரோகிகளாகக் கருதியோரை, எப்படியெல்லாம் கொடூரமாக சித்ரவதை செய்து, விடுதலைப் புலிகள் கொன்றனர் என்பதை, புலிகளின் அமைப்பிலேயே உறுப்பினராக இருந்த, முன்னாள் பெண் விடுதலைப் புலி நிரோமி என்பவர், தோலுரித்துக் காட்டியுள்ளார். விடுதலைப் புலிகள் அமைப்பில், 1987ம் ஆண்டு, நிரோமி டிசோசா என்ற பெண் சேர்ந்தார். விரைவிலேயே, விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகிய அவர், தற்போது ஆஸ்திரேலியாவில் வசிக்கிறார். இவர், விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்தபோது, நடந்த சம்பவங்களைத் தொகுத்து, "தமிழ் டைகர்ஸ்' (தமிழ் பெண் புலி) என்ற பெயரில், புத்தகமாக வெளியிட்டுள்ளார். அதில், நிரோமி எழுதியுள்ளதாவது:
சித்ரவதை: இந்திய அமைதிப் படையினருக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே, சண்டை நடந்த போது, இந்தியப் படைக்கு உளவு கூறியதாக, வெள்ளை என்ற வீரரை சித்ரவதை செய்த விடுதலைப் புலிகள், கழுத்தளவுக்கு மண்ணுக்குள் அவரை புதைத்து வைத்து, "சயனைடு' விழுங்கும்படி கட்டாயப்படுத்தினர். இறுதியாக, ஜெஸ்டின் என்ற விடுதலைப் புலி வந்து, வெள்ளையின் தலையை, கோடாரியால் வெட்டினார். அங்கு நின்று கொண்டிருந்த பிற விடுதலைப் புலிகள் அனைவரும் சேர்ந்து, சத்தமாக சிரித்தனர். ஒரு கரப்பான் பூச்சியை எப்படி கொல்வார்களோ, அதேபோல் வெள்ளையைக் கொன்றனர். வன்னி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த முகாமில், விடுதலைப் புலிகள் அமைப்பின் இரண்டாவது தலைவராகக் கருதப்பட்ட, மாத்தைய்யா, 18 வயதே நிரம்பிய சாந்தன் என்ற விடுதலைப் புலியை, சக பெண் விடுதலைப் புலியை காதலித்தார் என்பதற்காக, நெற்றியில் சுட்டுக் கொன்றார். சாந்தனின் உடலை, இருவர், காலைப் பிடித்து இழுத்து வந்தபோது, வழி நெடுகிலும் ரத்தம் வழிந்தோடியது.
சுட்டுக்கொலை: இதேபோல, தொடர்ந்து பல சித்ரவதை சம்பவங்களைப் பார்த்த பின், இது போன்ற வன்முறையால் தனி நாடு பெற முடியாது என, முடிவு செய்து, 1988ல், விடுதலைப் புலி கள் அமைப்பில் இருந்து வெளியேறினேன். கொள்ளை: நான், விடுதலைப் புலிகள் அமைப்பில் சேருவதற்கு முன்கூட, எதிர் கோஷ்டிகளைச் சேர்ந்தவர்களை விடுதலைப் புலிகள் கொடூரமாக கொலை செய்துள்ளனர். "டெலோ' அமைப்பைச் சேர்ந்தவர்களை, மரத்தில் தூக்கிலிட்டனர்; உயிருடன் தீ வைத்து கொளுத்தினர். "ஈ.பி.ஆர்.எல்.எப்., அமைப்பைச் சேர்ந்தவர்களையும் படுகொலை செய்தனர். இந்தியப் படையினரிடம் இருந்து தப்பி ஓடும்போது, கடைகளுக்குள் நுழைந்து, கோழி இறைச்சி, உடைகள், உணவுப் பொருட்கள் ஆகியவற்றை சூறையாடிச் சென்றுள்ளனர். பெண் விடுதலைப் புலிகளாக இருப்பவர்கள், அலங்காரப் பொருட்கள் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இருந்தாலும், சில பெண்கள், கடைகளில் இருந்து முக அலங்கார களிம்புகளையும், நக பாலீசுகளையும் திருடினர். இவ்வாறு, அந்த புத்தகத்தில் தெரிவித்துள்ளார்.

மெக்கா நகர விடுதியில் தீ விபத்து:இந்தியர் உட்பட 13 பேர் காயம்


ஜெட்டா:சவுதியில், இந்திய ஹஜ் பயணிகள் தங்கியிருந்த விடுதியில், தீ விபத்து ஏற்பட்டதில், 13 பேர் காயமடைந்தனர்.பக்ரீத்தையொட்டி, சவுதியில் உள்ள, மெக்கா மற்றும் மதினாவுக்கு, 20 லட்சம் யாத்திரிகர்கள் வந்துள்ளனர். இவர்களுக்கு தேவையான தங்கும் வசதி, மருத்துவ வசதிக்கு உள்ளிட்ட விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.மெக்கா நகரில், இந்தியர், வங்கதேசத்தினர், மியான்மர் நாட்டினர் தங்கியிருந்த கட்டடத்தில், நேற்று தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக, 179 யாத்திரிகர்கள் அந்த கட்டடத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். எனினும், 13 பேர் இந்த விபத்தில் லேசான காயமடைந்துள்ளனர். தீ விபத்துக்கான காரணம் குறித்து, விசாரிக்கப்பட்டு வருகிறது.

லெபனானில் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும், போலீசாருக்கும் மூண்ட சண்டையில் ஒருவர் பலி .


லெபனானில் முன்னாள் பிரிகடியர் ஜெனரல் விசம் அல் ஹசன் அவர்களின் சவ ஊர்வலத்தின் போது ஆயிரக்கனக்கானோர் கலந்து கொண்டு பிரதமர் அலுவலகத்தை தாக்க முற்பட்டனர். இதனால் போலீசாருக்கும் , போராட்டகாரர்களுக்கும் இடையே சண்டை மூண்டது. இதில் போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் ஒருவர் பலியானார்.

குவைத்தில் அரசுக்கு எதிரான போராட்டம் முறியடிப்பு :


குவைத் நாட்டில் தேர்தல் விதிமுறைகளை மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு தலைமை செயலகத்தை நோக்கி ஆர்ப்பாட்டகாரர்கள் பேரணி நடத்த முற்பட்டனர். நகரத்தின் பல பகுதிகளில் இருந்து போராட்டகாரர்கள் திரண்டனர். அவர்கள் குவைத் பிரதமர் வீடு அமைந்துள்ள செய்ப் அரண்மணியை நோக்கி செல்ல முயன்ற பொது போலீசார் கண்ணீர் புகை மற்றும் குண்டுகளை வீசி அவர்களை விரட்டி அடித்தனர். இதனால் பர பரப்பு ஏற்பட்டது.தேர்தல் விதிமுறைகளை மாற்றுவது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என்று போராட்டகாரர்கள் தெரிவித்தனர். மேலும் இந்த பேரணி குவைத் வரலாற்றிலேயே பெரிய பேரணி என்று போராட்டகாரர்கள் தெரிவித்தனர். அதே நேரம் " இந்த மாதரியான எந்த ஒரு ஆர்ப்பாட்டத்தையும் குவைத் அரசு அனுமதிக்காது " என்று அந்நாட்டு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2006 தேர்தல் விதிப்படி ஒருவருக்கு நான்கு ஓட்டு என்று இருந்த விதியை மாற்றி ஒருவருக்கு ஒரு ஓட்டு என்று ஷெய்க் சாபாஹ் அல் அஹ்மத் உத்தரவிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்லாமிய தேசியவாத அமைப்பு தான் இந்த போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மூன்று பேர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த அரசியல் குழப்பத்தால் அந்நாட்டு ஸ்டாக் எக்ஸ்சஞ்சில் பெரிய பின்னனைவை ஏற்படுத்தியுள்ளது.

ஞாயிறு, 21 அக்டோபர், 2012

ஜோர்டனில் அல்கைதா தொடர்புடையதாக 11 பேர் கைது :


ஜோர்டான் நாட்டில் உள்ள சாப்பிங் மால் மற்றும் ராணுவ தளங்களை தகர்க்க திட்டமிட்டதாக கூறி 11 பேர் ஞாயிறன்று கைது செய்யப்பட்டனர். இந்த செய்தியை அந்நாட்டு உளவுத்துறை அறிவித்ததாக ஜோர்டான் தொலைகாட்சி மற்றும் செய்தி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இவர்கள் அல்கைதா இயக்கத்துடன் தொடர்புள்ளவர்கள் என்றும் , இவர்கள் சிரியாவிலிந்து ஆயுதங்களுடன் ஜோர்டானுக்குள் நுழையும்போது கைது செய்யப்பட்டனர் என்றும் ஜோர்டான் அரசு செய்தி தொடர்பாளர் சமீ மயதாஹ் கூறிவுள்ளார். ஜோர்டான் அமெரிக்காவின் முக்கிய கூட்டாளி என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே 2005ல் இந்த நாட்டின் அம்மானில் ஹோட்டல் ஒன்றில் நடந்த குண்டு வெடிப்பில் 60௦ பேர் பலியாகி உள்ளனர். அதனால் தன இந்த எச்சரிக்கை நடவடிக்கை.

கடாபியின் இளைய மகன் கொலை


லண்டன் : லிபியாவின் முன்னாள் தலைவர் கடாபியின் மகன், நேற்று நடந்த சண்டையில் கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது.லிபியாவை, 30 ஆண்டுகளுக்கும் அதிகமாக ஆட்சி செய்த கடாபி, மக்கள் புரட்சியின் காரணமாக பதவியிலிருந்து இறக்கப்பட்டார். தலைமறைவாக இருந்த அவரை நேட்டோ படைகளின் உதவியோடு, கிளர்ச்சியாளர்கள் கடந்த ஆண்டு, ஆக., மாதம் சுட்டு கொன்றனர்.இந்நிலையில், கடாபியின் ஏழாவது மகன் கமீஸ் கடாபி, மிஸ்ரதா நகரில் நடந்த சண்டையில் கொல்லப்பட்டதாக, லிபிய தேசிய காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது.கமீஸ் கடாபிக்கு, 28. இன்னும் திருமணமாகவில்லை. இவரது மூத்த சகோதரர் சயீப், சிறையில் அடைக்கப்பட்டுள்ளார், என்பது குறிப்பிடத்தக்கது.

2013 ம.பி. சட்டசபை தேர்தலில் SDPI போட்டி


போபால்:எஸ்.டி.பி.ஐ.யின் மத்திய பிரதேச பிரிவு எதிர் வரும் 2013 சட்டசபை தேர்தலில் சுமார் 50 தொகுதிகளில் போட்டியிடுகிறது.மாநிலத் தேர்தல் குழு வழக்கறிஞர் ஸாஜித் ஸித்தீக்கி கூறுகையில் எஸ்.டி.பி.ஐ.யின் மத்திய பிரதேச பிரிவு எதிர் வரும் 2013 சட்டசபை தேர்தலில் சுமார் 50 தொகுதிகளில் போட்டியிடுகிறது என்று அறிவித்தார். மேலும் அவர் கூறுகையில் அக்டோபர் 20 முதல் நவம்பர் 20 வரை உறுப்பினர்களைச் சேர்க்கும் பிரச்சாரம் தொடங்கப் போவதாக தெரிவித்தார்.

சனி, 20 அக்டோபர், 2012

போலீஸ் சீருடையில் இருந்த நபர் சுட்டதில் மூன்று ஆப்கன் போலீஸ் பலி :


காபுலில் இருந்து 150 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள கோஸ்ட் மாகாணத்தில் போலீஸ் கான்ஸ்டபில் சக பணியாளர்களை சரமாரியாக சுட்டதில் மூன்று பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை காலை 03 .௦௦ 00மணிக்கு நடைபெற்றது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடை பெற்று வருவதாக காவல்துறை உயர் அதிகாரி அசிசுல்லா தெரிவித்துள்ளார். சுட்ட நபர் தாலிபான் அமைப்பின் உறுப்பினர் என்றும் , தாலிபான்களுடன் சிறிது நேரத்திற்கு முன் போனில் உரையாடியிருக்கிறார் என்றும் தகவல்கள் வெளியாகிவுள்ளன .

பனாமா கலவரத்தில் 9 வயது சிறுவன் சுடப்பட்டு சாவு :


பனாமாவில் அமைந்துள்ள டுட்டி ப்ரீ சோனை தனியார்மயமாக்க எதிர்ப்பு கடந்த வெள்ளிகிழமை நடந்த ஆர்ப்பாட்டம் கலவரமாக மாறியதில் போலீசார் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு சிறுவன் பலியானான். காவல்துறை தகவல்படி பொது மக்களில் பத்து பெரும், போலீசார் இந்து பெரும் காயமடைந்தனர். இந்த சம்பவத்தில் இரண்டு கடைகள் அடித்து நொறுக்கப் பட்டன. மேலும் ஒரு கேஸ் நிலையமும் சேதபடுத்தப்பட்டது. இந்த டுட்டி ப்ரீ சோன் 1948 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இதில் 30000 பேர் வேலை பார்கிறார்கள்.

முஸ்லிம் மாணவியர் ஹிஜாப் அணிய ரஷ்ய அதிபர் எதிர்ப்பு :


மாஸ்கோ:ஹிஜாப் என்பது முஸ்லிம் பெண்கள் கட்டாயம் அணியவேண்டிய ஒன்றாகும் . இஸ்லாமிய பெண்கள் தலையை மறைத்து தான் அன்னியர் முன் நடமாடவேண்டும் என்பது திருக்குரானின் கட்டளை. இதன் அடிப்படையில் உலகம் முழுவதும் முஸ்லிம் பெண்கள் , முஸ்லிம் பள்ளி மாணவியர், ஹிஜாப் அணிந்து தன வெளியில் நடமாடுகின்றனர். ஆனால் இதை புரிந்துகொள்ளாத ரஷ்யாவின் அதிபர் புடின் முஸ்லிம் பெண்கள் பள்ளிக்கு ஹிஜாப் அணிந்து வருவதற்கு , எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.ரஷ்யாவில், மொத்தமுள்ள, 15 கோடி மக்களில், இரண்டு கோடி பேர் முஸ்லிம்கள். செசன்யா, வடக்கு காகசஸ், டடார்ஸ்டான் ஆகிய மாகாணங்களில் முஸ்லிம்கள் அதிகம் உள்ளனர்.முஸ்லிம் மாணவியர் முக்காடு போட்டு வருவதற்கு சில மதத்துவேச சிந்தனை கொண்ட பள்ளி முதல்வர்கள் எதிர்ப்பு தெரிவித்து மாணவியரை மிரட்டுகின்றனர். இவர்களுக்கு வகாலத்து வாங்கும் விதமாக இது குறித்து ரஷ்ய அதிபர் புடின் குறிப்பிடுகையில், "ரஷ்யா, மதசார்பற்ற நாடு. எனவே, அனைத்து குடிமக்களிடையே சமத்துவம் கடைபிடிக்கப்படுகிறது. இதே சட்ட திட்டங்கள் தான், பள்ளியிலும் கடை பிடிக்கப்பட வேண்டும்' என்று முட்டாள் தனமாக உளறி உள்ளார் .

அல்அய்னில் நடைபெற்ற அமீரக TNTJ ஒருங்கிணைப்புக் கூட்டம்


அமீரக TNTJ ஒருங்கிணைப்பு குழு கூட்டம் சென்ற 05/10/2012 நடைபெற்றது. அல்அய்ன் கார்டன் ரெஸ்டாரன்டில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு அமீரக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் சகோ. ஹாமீன் இப்ராஹீம் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
அமீரக தம்ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் செயல்பாடுகள், எதிர்கால திட்டம் போன்றவைக் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இந்த ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் அமீரகத்தின் அனைத்து மண்டலங்களின் நிர்வாகிகள் மற்றும் தாயீகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அல்அய்ன் மண்டல நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.

தாலிபான்களால் சுடப்பட்ட மாணவியின் உடல்நிலை முன்னேற்றம் :


தாலிபான்களை தேவையில்லாமல் விமர்சனம் செய்து அவர்களால் தலையில் சுடப்பட்ட பாகிஸ்தானை சேர்ந்த பள்ளி மாணவி மலால யுசுப்சை உடல்நலம் தேறி வருவதாக அவரை மருத்துவம் செய்து வரும் மருத்துவர். டேவிட் ரோச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் 15 வயதான மலாலா தெளிவாக பேசுவதாகவும் , எழுதுவதாகவும் , ஆள் உதவியுடன் எழுந்து நடப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மலாலா இங்கிலாந்தில் சிகிச்சை பெற்று வருகிறார். பள்ளி மாணவியான மலாலா பத்துநாட்களுக்கு முன்பு தனது சகதோழிகள் இருவருடன் பள்ளிக்கு செல்லும் வழியில் தாலிபான்களால் சுடப் பட்டார். தலையில் பாய்ந்த குண்டை பாகிஸ்தான் மருத்துவமனியில் வைத்து அகற்றிய பிறகு உடனடியாக விமானம் மூலம் இங்கிலாந்து கொண்டு செல்லப் பட்டார். கியீன் எலிசபெத் மருத்துவமனை ப்ரிமின்கேம் அறகட்டளை மலாலாவின் மருத்துவ செலவை ஏற்று செலவளித்து வருகிறது.

தாரிக் அன்வருக்கு அமைச்சர் பதவி:பிரதமரிடம் சரத் பவார் சிபாரிசு


புனே:தேசியவாத காங்கிரஸ் கட்சி செய்தித் தொடர்பாளர், தாரிக் அன்வருக்கு, மத்திய அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என, பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, அந்தக் கட்சியின் தலைவர், சரத்பவார் சிபாரிசு செய்துள்ளார்.புனேயில், நிருபர்களிடம் அவர் கூறியதாவது:மத்திய அமைச்சரவை மாற்றம் செய்யப்பட உள்ளது. "கூட்டணி கட்சிகள், தகுந்த நபர்களின் பெயர்களை பரிந்துரைக்கலாம்' என, பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக் கொண்டார். எங்களது கட்சியின் செய்தித் தொடர்பாளர், தாரிக் அன்வருக்கு, மத்திய அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என, நான் சிபாரிசு செய்துள்ளேன். என் மகள், சுப்ரியா சுலேயின் பெயரை பரிந்துரைக்கவில்லை.இவ்வாறு சரத்பவார் கூறினார்.தேசியவாத காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகிய, பி.ஏ.சங்மாவின் மகள், அகதா சங்மா வகித்த, மத்திய இணையமைச்சர் பதவி, தாரிக் அன்வருக்கு வழங்கப்படலாம் என, தெரிகிறது.

வெள்ளி, 19 அக்டோபர், 2012

ஆப்கானிஸ்தானில் ஆயில் டிரக் மற்றும் பஸ் மோதி 7 பேர் சாவு. :


சின்ஹுவா : ஆப்கானிஸ்தானின் வடக்கு மாகாணமான ஜவ்ச்ஜான் பகுதியில் நேற்று வெள்ளிகிழமை அன்று விளையாட்டு வீரர்களை ஏற்றி வந்த பஸ்சும் , எண்ணெய் லாரியும் நேருக்கு நேர் மோதியதில் சம்பவ இடத்திலேயே ஏழு பேர் பலியானார்கள். இதில் ஆறு பேர் விளையாட்டுவீரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் 26 பேர் படுகாயமடைந்தனர். குறுகிய சாலைகளில் நெருக்கமாக வாகனங்கள் செல்வதால் தான் இங்கு அடிக்கடி விபத்து நிகழ்கிறது. இரண்டு வாகனங்களும் மோதியவுடன் ஏற்பட்ட வெடிவிபத்தில் தீ பரவியதால்தான் பலர் உயிரிழந்ததாக பயணி ஒருவர் குறிப்பிட்டார்.

எகிப்துக்கு 10 மில்லியன் டாலர் கடன் கொடுக்க கத்தார் முடிவு :


எகிப்துவில் 2011 ஜனவரியில் முன்னாள் அதிபர் ஹோஸ்னி முபாரகை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கு ஏற்பட்ட புரட்சி காரணமாக பில்லியன் டாலர் பண இழப்பு ஏற்பட்டது. இதனால் அந்த நாடு பெரும் பொருளாதார சரிவை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது. இதனை சரிசெய்யும்விதமாக வலைகுடானாடுகள் அதற்கு உதவி வருகின்றன. அதன் தொடர்ச்சியாகவே கத்தாரும் இந்த கடன் திட்டத்தை அறிவித்துள்ளது. கத்தார் நாட்டின் அட்டர்னல் ஜெனரல் அலி அல் மெர்ரி அரபு லீக் செயலாளருடன் இது தொடர்பாக கடந்த வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினார்.

யு டுப் இணையதளத்திற்கு போட்டியாக புதிய இணையதளம் :


யு டுப் You tube இணையதளம் கடந்த மாதம் நபிகள் நாயகத்தை இழிவுபடுத்தும் விதமாக எடுக்கப்பட்ட திரைப்படத்தின் துண்டு காட்சியை வெளியிட்டிருந்தது. இந்த காட்சியை இணையதளத்திலிருந்து நீக்கும்படி பல்வேறு நாடுகள் கோரிக்கை வைத்த பிறகும் அதற்கு செவி சாய்க்காமல் திமிராக நடந்து கொண்டது. ஆனால் பல்வேறு நாடுகளில் இந்த காட்சி ஒளிபரப்ப தடை செய்யப்பட்டது. இருந்தாலும் இணையதள உலகில் இதன் சர்வாதிகார போக்கை கண்டிக்கும் விதமாக, பாடம் புகட்ட வேண்டும் என்பதற்காக இந்த இணையதளத்தை புறக்கணிக்கும்படி இந்தியாவை சேர்ந்த மூத்த இஸ்லாமிய மார்க்க அறிஞரும் , உலகம் முழுவதும் கிளைகளை கொண்ட தௌஹீத் ஜமாஅத் என்ற அமைப்பின் நிறுவனருமான மவ்லவி. பி.ஜே. அவர்கள் உலக முஸ்லிம்களுக்கு வேண்டுகோள் விடுத்திருந்தார். இதனை ஏற்று உலகம் முழுவதிலும் உள்ள முஸ்லிம்கள் தாங்கள் பதிவேற்றம் செய்த வீடியோக்களை யு டுப் இணையதளத்திலிருந்து நீக்கினர். ஆனாலும் சத்திய இஸ்லாத்தை பரப்ப நமக்கு ஒரு இணையதளம் வேண்டும் என்ற கோரிக்கை பல்வேறு தரப்பிலிருந்து வைக்கப்பட்டது. இதனை நடைமுறை படுத்தும்விதமாக யு டுப் இணையதளம் போல் அனைத்து வசதிகளும் கொண்ட இணையதளம் ஆன்லைன் பி.ஜே. இணையதள நிர்வாகத்தின் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இணையதளத்தில் யு டுப் இணையதளம் போல் நேயர்கள் தங்கள் வீடியோக்களை பதிவேற்றம் upload செய்து கொள்ளலாம். Visit video.onlinepj.com

வியாழன், 18 அக்டோபர், 2012

துபாயில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளருக்கு வரவேற்பு


துபாய்: துபாயில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய செயலாளரும் டில்லி மாநிலத் தலைவருமான குர்ரம் அனீஸுக்கு வரவேற்பு, அன்னபூர்ணா உணவகத்தில் நடைபெற்றது. அமீரக காயிதேமில்லத் பேரவை தலைவர் குத்தாலம் ஏ.லியாகத் அலி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொதுச் செயலாளர் ஏ.முஹம்மது தாஹா,பொருளாளர் எஸ்.கே.எஸ். ஹமீதுர் ரஹ்மான் பேசினர்.வரவேற்புக்கு நன்றி தெரிவித்து குர்ரம் உமர் பேசினார்.நிகழ்ச்சியில் முஸ்லிம் லீக் நுற்றாண்டு வரலாறு மூன்றாம் பாகத்தை குர்ரம் அனீஸ் உமர் வெளியிட முதல் பிரதியை குத்தாலம் ஏ.லியாகத் அலி, அமைப்புச்செயலாளர் லால்பேட்டைஏ.எஸ்.அப்துல் ரஹ்மான், துபை மண்டலச் செயலாளர் முதுவை ஹிதாயத், அபுதாபி மண்டல மக்கள் தொடர்புச்செயலாளர் ஆவை ஏ.எஸ்.முஹம்மது அன்சாரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
துணைத் தலைவர் காயல் நூஹு சாஹிப், மக்கள் தொடர்பு செயலாளர் கீழக்கரை ஹமீது யாசின், கொள்கை பரப்புச் செயலாளர் கடையநல்லூர் ஹபீபுல்லாஹ், தேரா பகுதி செயலாளர்கள் அய்யம்பேட்டை ராஜாஜி காசிம், வி.களத்தூர் சாகுல் ஹமீது, ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் திண்டுக்கல் ஜமால் முஹையத்தீன், ஆவணியாபுரம் முஹம்மது ஜுனைத் கலந்து கொண்டனர்.

நிரந்தர பணக்காரர் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஐதராபாத் நிஜாம்


லண்டன்:உலகின் நிரந்தர பணக்காரர்கள் பட்டியலில், ஐதராபாத்தை ஆண்ட, கடைசி நிஜாமின் பெயர் இடம் பெற்றுள்ளது.
உலகின் நிரந்தர பணக்காரர்கள் பட்டியலை, "செலிபிரிட்டி நெட் வொர்த்' என்ற இணையதளம் வெளியிட்டுள்ளது; இதில், 25 பேர், இடம் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில், பெண்கள் யாரும் இடம் பெறவில்லை.இந்த இணையதளம் வெளியிட்டுள்ள பட்டியலில், 14 பேர் அமெரிக்கர்கள். தற்போது, இந்த பட்டியலில் உள்ளவர்களில், மூன்று பேர் மட்டுமே உயிரோடு உள்ளனர்.ஐதராபாத்தை ஆண்ட கடைசி நிஜாம், உஸ்மான் அலி கான். இவரது சொத்து மதிப்பு, 13.50 லட்சம் கோடி ரூபாய்; இவர் இந்தியாவின் நிரந்தர பணக்காரராக கருதப்படுகிறார். 1967ல், 80 வயதில் காலமானார். இவருக்கு, ஏராளமான ஆசை நாயகிகள் இருந்தாலும், மூன்று பேர் மட்டுமே மனைவியாக அங்கீகரிக்கப்பட்டனர். மத்திய ஆப்ரிக்க நாடான மாலியை, 14ம் நூற்றாண்டில் ஆட்சி செய்த மன்சா மூசாவின் சொத்து மதிப்பு தான், உலகிலேயே அதிகம். இவரது சொத்து மதிப்பு, 23 லட்சம் கோடி ரூபாய். தன்னுடைய நாட்டில் இருந்த தங்கம் மற்றும் உப்பு வளங்களை சுரண்டி, சொத்து சேர்த்தார்.இந்த பட்டியலில், அமெரிக்க செல்வந்தரான ராக்பெல்லரின் பெயர், மூன்றாம் இடத்தில் உள்ளது. இவரது சொத்து மதிப்பு, 20 லட்சம் கோடி ரூபாய்.இப்பட்டியலில், இடம் பெற்றுள்ள குறைந்த சொத்து மதிப்புடைய பணக்காரர், வாரன் பப்பெட், 82 வயதான இவரின் சொத்து மதிப்பு, 3.7 லட்சம் கோடி ரூபாய்.

கூடங்குளம் பிரச்சினை அயல்நாட்டு சதியா ?


கூடங்குளம் ஓர் பார்வை : திருநெல்வேலியில் இருந்து சுமார் 80 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது கூடங்குளம். இங்கு தான் 1000 மெகா வாட் மின் உற்பத்தி திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் துவங்க உள்ளன. இதில் யுரனியம் நிரப்புவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தான் இந்த கலவரம். இந்த இரண்டு அணு உலைகளுக்கான செலவு மட்டும் சுமார் 13 ஆயிரம் கோடிகளை தாண்டி விடுகிறது. இது ரஷ்யத் தொழில் நுட்பத்தின் அடிப்படையில் அமைக்கப் பட்டு வருகிறது. ஒருவேளை அமெரிக்க்காவின் ஆதரவில் அமைக்கப் பட்டால் இந்த களேபரம் வராதோ என்று நினைக்குமளவுக்கு மத ரீதியிலான போராட்டமாகவே இது பார்க்கப் படுகிறது. கம்யுனிச ரஸ்யாவால் இந்த அணு உலை அமைக்கப் படுவதால் தான் இந்த போராட்டம் என்று பலர் கூறுவதும் கேட்கத்தான் செய்கிறது.
மேலும் ஒரு அணுமின் நிலையத்தை சில மாதங்களில் கட்டி முடித்து உற்பத்தியை துவங்கி விட முடியாது. இந்த அணு உலை அமைப்பதற்கான ஒப்பந்தம் 23 ஆண்டுகளுக்கு முன்பே 1988 ல் ராஜீவ் காந்தி - கோர்பசேவ் இடையே போடப் பட்டது. ஆனால் இதற்கு நான்கு ஆண்டுகளுக்கு முன்பே அடிப்படை ஆயத்த வேலைகள் துவக்கப் பட்டன. இந்த திட்டத்திற்கு தேவையான நிலத்தை அந்தப் பகுதி மக்களின் ஆதரவோடுதான் விலைக்கு வாங்கப் பட்டது என்று அரசு அதிகாரிகள் குறிப்பிடுகிறார்கள். மக்கள் ஆதரவு இல்லாமல் இடத்தை வாங்கவும் முடியாது என்பது நிதர்சனம். கடந்த 20 ஆண்டுகளாக கட்டுமானப் பணிகள் நடந்து இப்போது மின் உற்பத்திக்கு தயாராக உள்ளது. துவக்கத்தில் எதிர்ப்பு காட்டி இதை நிறுத்தி இருக்கலாம். ஆனால் இத்தனை கோடி செலவான பிறகு இப்போது நிறுத்த முயற்சிப்பது எந்த வகையில் நியாயம் என்பது தான் சிந்தனையாளர்களின் கருத்து. உலகில் உருவான எந்த ஒரு கண்டுபிடிப்பிற்கு பின்னும் ஆபத்துகள் இல்லாமல் இல்லை. விமானத்தில் சென்றால் விபத்து ஏற்படும் என்பதற்காக விமானத்தையே தடை செய்ய முடியாது. எத்தனையோ லட்சம் பேர்களின் தியாகத்தில் தான் இன்றைய நவீன யுக கண்டுபிப்புகள் எல்லாம் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. நாளைக்கு வரும் விசயத்திற்காக இன்றைக்கு தடுப்பு நடவடிக்கை தான் மேற்கொள்ள முடியும். பாதுகாப்பில் குறை பாடுள்ளதோ என்று தான் ஆராய வேண்டுமேயொழிய கொசுத் தொல்லைகாக வீட்டை கொளுத்த முடியாது. அணு உலைகளை விட ஆபத்தான நுன்னுயிர் தொழிற்சாலைகளையே நாம் கண்டு கொள்வதில்லை. இதை விட முக்கியமான விஷயம் இந்த அணு மின் நிலையத்திகுள்ளே நூற்றுக்கணக்கான விஞ்ஜானிகள் வேலை பார்கிறார்கள். அணு உலை வெடித்தால் முதலில் மரணமடைபவர்கள் அவர்கள் தான். அவர்களே அணு உலைனால் ஆபத்து இல்லை என்கிறார்கள். அணு உலைகளின் அபாயத்தை பற்றி அதிகம் தெரிந்தவர்கள் அவர்கள்தான். அப்படி என்றால் ஒன்றுமறியாத மக்களை வைத்து சிலர் விளையாடுவது போல்தான் தோன்றுகிறது. இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் கூட அணு உலை ஆபத்து இல்லை என்று தான் கூறுகிறார் . இதை உணர்ச்சி பூர்வமாக ஆக்காமல் அறிவுப் பூர்வமாக சிந்திக்க வேண்டும். அணு மின் நிலையம் அமைக்க கூடங்குளத்தை ஏன் தேர்ந்தெடுத்தார்கள் ?
1 . அணுமின் நிலையம் அமைந்துள்ள கூடங்குளம் பகுதி பூகம்ப அபாயம் மிகக் குறைவான பகுதி. 2 . பூமிக்கு அடியில் கடினமான பாறைகள் இருப்பதால் அணு உலைகளின் கான்கிரீட் அடித்தளத்திற்கு சிறந்தது. 3 . மிகப் பெரிய நில அதிர்வு வந்தாலும் உள்கட்டமைப்பு பாதிக்காத வகையில் முழுமையாக இயங்கலாம். 4 . இங்குள்ள கட்டிடங்களின் தரை உயரம் கடல் மட்டத்திலிருந்து 7 .5 மீட்டர் உயரத்தில் உள்ளது. 5. ஒருவேளை நில அதிர்வு ஏற்பட்டால் சுனாமி யால் பாதிப்பு ஏற்படாத வகையில் கடல் நீர்மட்டத்தை கணக்கிட்டு தான் அணு உலை அமைக்கப் பட்டுள்ளது. 6 . தேவைக்கு ஏற்ற நீர் கடலில் உள்ளது. 7 . அணு உலையில் இருந்து 1 .2 மைல் தூரத்திற்கு 18 மைல் சுற்றளவில் நெருக்கமான அதிக மக்கள் தொகை கொண்ட ஊர் கிடையாது. 8. இது விவசாயத்திற்கு பயன்படாத வறண்ட பூமி. 9 . ரயில், கப்பல், சாலை என்று போக்குவரத்து வசதி சிரமம் இல்லை. 10 . விமான விபத்து, ரசாயன விபத்து, ராணுவ ஆபத்து எதுவும் இல்லை. மேற்குறிப்பிட்ட இத்தனை அம்சங்களை அடிப்படையாக கொண்டு ஆய்வு செய்துதான் கூடங்குளத்தை தேர்ந்தெடுத்துள்ளார்கள். சும்மா எல்லா பகுதிகளையும் அணு உலை அமைக்க உபயோகப் படுத்த முடியாது. இந்தியாவில் மட்டுமா ? அணு உலைகள் உலகம் முழுவதும் 31 நாடுகளில் 44o இடங்களில் அமைக்கப் பட்டுள்ளது. உலகின் கலாசார சிகரம் எனப்படும் அமெரிக்காவில் (அமெரிக்கர்கள் தங்கள் உயிருக்கு பயப்படுபவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். அடுத்தவர் உயிரைப் பற்றி கவலை படமாட்டார்கள் அங்கு ) மட்டுமே 104 அணு உலைகள் உள்ளன. பிரான்ஸ் நாட்டில் 59 ம், பூகம்பத்தால் பதிக்கப் படுகிற ஜப்பானில் 55 அணுமின் நிலையங்கள் உள்ளன. ஏன் இந்தியாவில் தமிழ் நாட்டில் உள்ள கல்பாக்கம் உட்பட 17 அணுமின் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இந்தியாவில் அணுமின் நிலையங்களை இயக்க திறமையுள்ள , துணிச்சல் உள்ள ஏராளமான் நிபுணர்கள் உள்ளனர் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம். அணு உலைவெடித்து சிதறினால் , கதிரியக்கம் வெளியானால் ஆபத்து என்பது மறுக்க முடியாத உண்மைதான் . அதற்காக எல்லா அணு உலைகளும் கண்டிப்பாக வெடித்தே தீரும் என்று அச்சப் பட வேண்டிய அவசியம் இல்லை.
கூடங்குளம் பிரச்சினை அயல்நாட்டு சதியா ? கூடங்குளம் போராட்டங்களை நாம் அயல் நாட்டு சதி என்று சொல்வதற்கு பல நியாயமான காரணங்கள் உள்ளன. ஏனென்றால் தூத்துக்குடி, திருநெல்வேலி பகுதிகளில் செயல்படுகின்ற பல கிறிஸ்தவ அமைப்புகள் வெளிநாடுகளில் இருந்து சமூக சேவைக்காக என்று சொல்லி அதிகமான அளவில் நிதி பெற்று வருகின்றன. அதிலும் குறிப்பாக அமெரிக்கா , பிரான்ஸ் , ஜெர்மனி போன்ற நாடுகளில் இருந்து கணிசமாக பணத்தை பெற்று உள்ளன. உதாரணமாக, தூத்துக்குடி டயசிஸ் அசோசிசன் (TDA) என்ற அமைப்பு 2010 -2011 ம் ஆண்டில் பிரான்சில் இருந்து ஒரு கோடியே 43 லட்சம் 23 ஆயிரம் 406 ரூபாய், ஜெர்மனியில் இருந்து 84 ,13 ,619 ரூபாய், இத்தாலியில் இருந்து 61 ,55 ,843 ரூபாய், நெதர்லாந்தில் 45 ,54 ,572 ரூபாய் ஆக மொத்தம் ஏறக்குறைய 4 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடை ஒரு ஆண்டில் பெற்றுள்ளது. இது போல் பல அமைப்புகள் பெற்றுள்ளன . இவை அனைத்து பணமும் மத விவகாரங்கள், மக்கள் சேவைக்கு மட்டும்தான் பயன் படுத்தப் படுகிறதா ? இல்லை கூடங்குளத்திற்கும் பயன் படுத்தப் படுகிறதா ? என்ற சந்தேகம் பெரும்பாலோருக்கு எழத்தான் செய்கிறது. இந்த சந்தேகம் பிரதமருக்கும் எழுந்ததால் தான் கடந்த வருடம் பத்திரிக்கை ஒன்றுக்கு அளித்த பெட்டியில் இந்த கருத்தை தெரிவித்தார். மேற்குறிப்பிட்ட தகவல் அனைத்தும் இந்த வருடம் ஜனவரி மாதம் இந்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட தகவல்கள். பல பத்திரிகைகளிலும் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க , பிரான்ஸ் ,ஜெர்மனிக்கு இந்தியாவில் உருவாகும் அணுஉலை திட்டத்தை எதிப்பதற்கான காரணம் என்ன ? ஏன் தேவை இல்லாமல் எதிர்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா ? அதற்கு காரணம் உண்டு. அமெரிக்க, ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் அணு உலைகளையும் , அதன் தொழில் நுட்பத்தையும் இந்தியாவிடம் விற்க முயற்சி செய்து முடியாமல் போய் விட்டது. ஏனென்றால் இந்தியாவின் சட்ட திட்டங்களுக்கு அவை ஒத்துவரவில்லை. உதாரணமாக ஏ,பி, 1000 (A.P.1000) அணு உலையை தயாரிக்கும் வெஸ்டிங் ஹாவுஸ் - டோசிபா என்கிற அமெரிக்க நிறுவனம் இந்திய சட்டங்களில் இருந்து தங்களுக்கு விதிவிலக்கு அளிக்கும்படி கேட்டன இந்தியா அதற்க்கு மறுத்து விட்டது. இது போல் தான் மற்ற நாடுகளும். தங்கள் அணு உலைகளின் விற்பனை வாய்ப்பு பறிபோய் விட்டதே என்ற காழ்புணர்ச்சியில் இந்த நாடுகளின் நிறுவனங்கள் சதி வேலைகளில் ஈடு பட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு. மேலும் தமிழ் நாட்டில் உள்ள தொண்டு நிறுவனங்களுக்கு ( பெரும்பாலானவை கிறிஸ்தவ அமைப்புகள் ) 2009 - 2010 ம் ஆண்டுகளில் மட்டும் வெளிநாடுகளில் இருந்து வந்த நிதி தொகை 1663 .31 கோடி ரூபாய்கள் என்பது நம்மை எல்லாம் மலைக்க வைக்கிறது. இதில் கூடங்குளம் போராட்டகுழு ஒருங்கிணைப்பாளர் உதய குமாருக்கும் சாக்செர் (SOCCER) South Asian community center for Education and Research என்ற பெயரில் தன்னார்வ அமைப்பு உள்ளது என்பதை நாம் கவனிக்க வேண்டும். பல நிறுவனங்களை சி.பி.ஐ. விசாரித்து நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒட்டு மொத்தமாக கண்ணைமூடி கொண்டு நாம் குற்றம் சுமத்தவில்லை . சந்தர்ப்ப சூழ்நிலைகள் கூடங்குளம் போராட்டத்திற்கு அயல் நாட்டு சதிதான் காரணமாக இருக்கும் என்று நம்பத்தான் வைக்கிறது. பொதுவாகவே ஊடகங்கள் பொறுப்புணர்வில்லாமல் நடப்பது தான் இந்த மாதியான அறிவியல் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் உணர்ச்சிபூர்வமாக மாறுவதற்கு காரணம். பிரச்சினையை ஊதி பெரிதாக்காமல் இருப்பது பத்திரிகைகளின் கடமை. கேட்டதை விசாரிக்காமல் இணையதளம் மூலமாக பரப்பாமல் இருப்பது பொது மக்களின் கடமை. மக்களின் அச்ச உணர்வை நீக்கி ஆபத்து இல்லை என்று புரிய வைப்பது நல்ல அரசின் கடமை. அவரவர் கடமையை சரி வர செய்தாலே பிரச்சினை தீர்ந்து விடும் . மக்களின் வாழ்விலும் வீடுகளிலும் ( மின்சார பிரச்சினை தீர்ந்து ) ஒளி பிறக்கும். ஆக்கம் : அபுல் ஹசன் - தக்கலை.

நியூயார்க் மீது தாக்குதல் நடத்த முயன்ற வங்கதேச இளைஞர் கைது


நியூயார்க்: அமெரிக்காவில் நியூயார்க் வர்த்தக மையத்தில் கட்டடங்கள் சிலவற்றை கார் குண்டு தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக ஒரு இஸ்லாமிய இளைஞர் கைதானார். இது தொடர்பாக புலனாய்வு பிரிவு போலீசார் விசாரண‌ை நடத்தி வருகின்றனர். வங்கதேச நாட்டைச் சேர்ந்த குவாஸிமுகமது ரிஸ்வானூல் ஆஷான் நபீஸ் (21) என்ற இளைஞர் அமெரி்க்காவிற்கு மாணவர் விசா பெற்று கடந்த ஜனவரி மாதம் வந்துள்ளார். நியூயார்க் நகரில் முக்கிய கட்டடங்களை நோட்டமிட்டு கடந்த செப்டம்பரில் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் , நியூயார்‌க் நகரின் மன்ஹாட்டனில் உள்ள வர்த்தக கட்டடங்கள் உள்ளிட்ட இடங்களை கார் குண்டு மூலம் தாக்குதல் நடத்த முயன்றதாகவும் எப்.பி.ஐ. போலீசார் நபீ‌‌ஸை இன்று கைது செய்தனர். தற்போது புரூக்ளின் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதன் மூலம் நியூயார்க் நகரில் நடத்த இருந்த மிகப்பெரிய தாக்குதல் சதி திட்டம் முறியடிக்கப்பட்டது என்று அமெரிக்க மீடியாக்களும், அதனை அப்படியே வாந்தி எடுக்கும் இந்திய மீடியாக்களும் செய்தி வெளியிட்டுள்ளது. உண்மையான நிலவரம் வெளிவருமா ? பொறுத்திருந்து பார்ப்போம் .

புதன், 17 அக்டோபர், 2012

பூரண மது விலக்கு கோரி தமிழகம் முழுவதும் SDPI போராட்டம்!


சென்னை: பூரண மது விலக்கை அமுல் படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (SDPI) கட்சியினர் தமிழகம் முழுவதும் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.பல்வேறு நகரங்களில் சாலை மறியலில் ஈடுப்பட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.

கடாபியுடன் சேர்த்து 66 பேர் கொல்லப்பட்டனர் : மனித உரிமை ஆணையம் அறிக்கை


லிபியாவின் முன்னாள் அதிபர் முஅம்மர் கடாபி கொல்லப்பட்ட தினத்தில் அவருடன் சேர்த்து காவலில் இருந்த 66 பெரும் கொல்லப் பட்டனர் என்று மனித உரிமை ஆணையம் புதிய ஆதாரம் வெளியிட்டுள்ளது. இதற்கான போன் வீடியோ , புகைப்பட ஆதாரத்தையும் அம்பலப் படுத்தியுள்ளது. இது சர்வதேச குற்றவியல் சட்ட விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் மனித உரிமை ஆணையம் கூறியுள்ளது.

பஹ்ரைனில் சமூக ஆர்வலர் கைது :


பஹ்ரைனில் பிரபலமான மனித உரிமை போராளி முஹம்மது அல் மஸ்கட்டி கடந்த செவ்வாய் கிழமை அனுமதியில்லாமல் பனாமா ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணியில் கலந்து கொண்டதற்காக கைது செய்யப்பட்டார் . பகரினில் மன்னராட்சிக்கு எதிராக கடந்த 2011 பிப்ரவரி முதல் தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடந்து வருகின்றன.
இதன் தொடர்ச்சியாக 80 க்கும் மேற்பட்ட போராளிகள் தலைவர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர். பஹ்ரைன் நாட்டை நூறு ஆண்டுகளுக்கு மேலாக ஒரு செல்வச்செழிப்பு மிக்க குடும்பம்தான் ஆட்சி செய்து வருகிறது. அவர்களுக்கு அமெரிக்க ஆதரவு அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.